வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

இந்த என் செருப்பையும் கழட்டித்தரேன் அடிச்சுக்கோ.. பாரதியை கிழித்து தொங்கவிட்ட வெண்பா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதிகண்ணம்மா. இத்தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் செல்கிறது. இத்தொடரில் ஹேமா தன் அப்பா பாரதிக்கு வெண்பாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். ஏனென்றால் ஹேமாவின் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என எல்லோரும் சந்தோஷமாக உள்ளனர்.

ஆனால் அப்பா பாரதி மட்டும் தனியாக உள்ளார், இதனால் அவரைப் பார்த்துக் கொள்ள வெண்பாவை திருமணம் செய்து வைக்க ஹேமா நினைக்கிறாள். அதேபோல் வெண்பாவும் பாரதியை நன்கு பார்த்துக் கொள்வது போல் ஹேமா முன்னிலையில் நடிக்கிறாள்.

இந்நிலையில் மாயாண்டி மேல் கடும் கோபத்தில் உள்ளார் வெண்பா. அப்போது பாரதி எதர்ச்சையாக வெண்பாவிற்கு போன் செய்ய அப்போது வெண்பா கோபமாக பேசுகிறார். இப்ப எதுக்கு எனக்கு போன் பண்ண, உங்க வீட்ல யாராவது ஏதாவது உன்னை திட்டினேனா அதுக்கு எனக்கு போன் பண்ணி பொலம்ப வந்தியா என பயங்கரமாக வெண்பா திட்டுகிறார்.

அதுமட்டுமல்லாமல் பாரதியை குடிகாரன் என வெண்பா திட்ட, அதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாரதி போனை கட் செய்கிறார். இதை அனைத்தையும் ஹேமா மறைந்திருந்து கேட்கிறாள். இதனால் வெண்பாவால் தன் அப்பாவுக்கு தான் கஷ்டம் என ஹேமா நினைக்கிறாள். இது அனைத்தையும் சௌந்தர்யாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சௌந்தர்யா, வெண்பாவிற்கு எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு பாரதியோட சண்டை போடாம நிம்மதிய கெடுக்கிறார் என ஹேமாவிடம் கூறுகிறாள். அவனுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தாலும் பரவால்ல ஆனால் வெண்பா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணாம இருந்தா போதும் என சௌந்தர்யா கூறுகிறாள்.

ஹேமாவை மடக்கி எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து வெண்பா, தவளை தன் வாயாலே கெடும் என்பதுபோல தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார். இதனால் ஹேமா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News