வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்.. காசுக்காக இப்படியுமா

தமிழ் சினிமாவில் நடிகை மற்றம் பாடகியாக உள்ளவர் ஸ்ருதிஹாசன். இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் மொழியை தாண்டி பல மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. அதனை சரியாக பயன்படுத்தி தற்போது வரை தனது திறமையை நிரூபித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவரை இன்ஸ்டாகிராமில் 14 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தன்னுடைய அடுத்த படத்துக்கான அறிவிப்பை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய், சூர்யா, அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுடன் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் தெலுங்கின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 154 வது படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தை பாபி இயக்கயுள்ளார்.

இப்படத்திற்கான அப்டேட் மகளிர் தினத்தன்று வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையை மையமாக கொண்டு இருப்பதாகவும் சிரஞ்சீவிக்கு விட ஸ்ருதிஹாசனுக்கு தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதாவது திருடனாக இருக்கும் சிரஞ்சீவியை போலீசாக இருக்கும் ஸ்ருதிஹாசன் எப்படி கண்டுபிடிக்கிறார். அவரை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கிறாரா, இல்லை தனது காதலனை காப்பாற்றுகிறார என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு விட ஸ்ருதிஹாசன் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளதாக சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

இப்படத்தை மைத்ரி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முதல்முறையாக சிரஞ்சீவி மற்றும் ஸ்ருதிஹாசன் இணைய உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Trending News