விஜய் டிவி பிரபலங்களால் தலையில் துண்டை போடும் சன் பிக்சர்ஸ்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

எதற்கும் துணிந்தவன் படம் நேற்று ரிலீஸ் ஆகி எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யா நடித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த படத்தை பற்றி ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பெண்களுக்காக போராடிய வசனங்களும், காட்சிகளும் மட்டும்தான் ரசிகர்களை கவர்ந்தது.

சூர்யாவுக்காக எழுதப்பட்டிருந்த வசனங்களும், வைக்கப்பட்டிருந்த மாஸ் காட்சிகளும் ரசிகர்களை கவரவில்லை என்று சொல்லலாம். மேலும் சரண்யா பொன்வண்ணன் மற்றும் சத்யராஜ் இருவரும் செய்யும் காமெடிகள் வெறுப்படையச் செய்தது.

இளவரசு, தேவதர்ஷினி வரும் காட்சிகள் மட்டும் காமெடிகள் சற்று கலகலப்பாக செய்தது. அதைவிட விஜய் டிவி பிரபலங்களான பழைய ஜோக் தங்கதுரை, ராமர் மற்றும் குக் வித் கோமாளி புகழ் மூவரும் செய்த காமெடி மற்றும் நடிப்பு ரசிகர்களுக்கு துளிகூட பிடிக்கவில்லை.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சூர்யாவை பார்த்து பழைய ஜோக் தங்கதுரை ‘உங்கள சிஷ்யனாக இருக்க பெருமைப்படுகிறேன்’ என வசனம் பேசுவது சிறிதளவுகூட காட்சிக்கு பொருந்தாத வகையில் இருக்கும்.

இது எல்லாம் ஆதி காலத்திலேயே பல நடிகர்கள் பேசியுள்ளனர் என படத்தை பார்த்து கொண்டிருப்பவர்கள் பலரும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்த மாதிரி படத்தில் வந்த காமெடியை வைத்து சிரித்ததை விட தியேட்டரில் இருப்பவர்கள் அந்த நடிகர்களை வைத்து கிண்டல் செய்ததை வைத்துதான் ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

இப்படி விஜய்டிவி பிரபலங்களால் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது எதற்கும் துணிந்தவன். கதைக்கரு நன்றாக இருந்தாலும் இது போன்ற காமெடிகள் ரசிகர்களிடம் வெறுப்படைய செய்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தலையில் துண்டை போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.