எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார். அஜித்தின் படம் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. வலிமை படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள், பைக் ரேஸ் போன்றவை ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்நிலையில் இதே கூட்டணியில் அஜித்தின் AK61 படம் உருவாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தில் தனது கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஜே கே கிரியேஷன்ஸ் நிறுவனம் உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தார்.
ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் மெட்ரோ. இப்படம் அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபிசிம்ஹா, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் 2017இல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மெட்ரோ படத்தில் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய தம்பியை ஹீரோ கொள்வதைப் போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் மெட்ரோ படத்தை பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில் தங்கள் படத்தின் கதையை காப்புரிமை பெறாமல் இதே கதையை வலிமை படத்தில் பயன்படுத்தியுள்ளதாக ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடுத்துள்ளார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு மார்ச் 17ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது