வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இளையராஜாவே வியந்து பாராட்டிய 2 பாடல்கள்.. திரும்பத் திரும்பக் கேட்டாலும் திகட்டாது

தமிழ் சினிமாவை இன்றுவரை தன்னுடைய அற்புதமான இசையால் கட்டிப்போட்டவர் இசை ஞானி இளையராஜா. அந்தக் காலகட்டத்தில் எல்லாம் எங்கு திரும்பினாலும் இவரின் பாடல்கள் தான் எல்லா இடங்களிலும் ஒலிக்கும். அளவுக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமைக்குரியவர்.

அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. வைரமுத்து வரிகள் எழுத இளையராஜா இசை அமைக்க ஆஹா, அற்புதம் என்று ஒரு காலத்தில் மக்கள் பேசினார்கள். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும் தாறுமாறாக ஹிட்டடித்த சம்பவங்களும் உண்டு.

இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக அமைந்தவர் பாரதிராஜா. ஏனென்றால் ஆரம்பத்தில் இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். ஆனால் அப்போது இளையராஜாவிற்கு வைரமுத்துவின் வரிகள் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

அதனால் நீங்கள் சென்று பாடல் வரிகள் எழுதி விட்டு வாருங்கள் அப்புறம் பார்க்கலாம் என்று அவரை அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு வைரமுத்து எழுதிய பாடல் வரிகள்தான் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்னும் பாடல்.

அவரின் இந்த வரிகளைக் கேட்டு பாரதிராஜா மிகவும் வியந்து போய் பாராட்டியிருக்கிறார். பின்னாளில் இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அப்படித்தான் வைரமுத்து இளையராஜாவுடன் கூட்டணி அமைத்தார்.

அதுமட்டுமின்றி பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தில் இடம்பெற்ற பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற பாடல் வரிகளும் இளையராஜாவால் மறக்க முடியாத ஒன்றாகும். இதைப்போன்று பல பாடல்களும் வைரமுத்துவின் வரிகளில் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News