வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாக்யாவிடம் வசமாக சிக்கும் கள்ளக்காதலன்.. கூண்டோடு மாட்ட போகும் ஜோடி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை நிரந்தரமாக பிரியும் நோக்கத்தில், விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் ராதிகாவை செய்துகொள்ள கோபி தயாராகிவிட்டான்.

இதனால் இன்னும் ஆறே மாதத்தில் பாக்யாவின் சம்மதத்தை பொருட்படுத்தாமல் ராதிகாவுடன் சேர்வது வாழ கோபி சுயநலமாக சிந்திக்கிறான். ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பு அவளுடைய தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கோபியை அறிமுகப் படுத்தும் விதத்தில் ராதிகா கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்கிறாள்.

இதற்கு பாக்யாவையும் ராதிகா அழைக்கிறாள். ஆனால் பாக்யா கோபி தான் ராதிகாவின் வருங்கால கணவர் என்பதை தெரிந்து கொள்ளாமல், புதிதாகத் துவங்க இருக்கும் உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என பாக்யா வாழ்த்துகிறார். இப்படி பாக்யா மற்றும் ராதிகா இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, கோபி அதே வீட்டில் தான் இருக்கிறான்.

இதை பாக்யாவின் வீட்டு வேலைக்காரி செல்வி கண்டுபிடிக்க பாக்யாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ராதிகாவின் வீட்டு வாசலில் கோபியின் கார் நிற்பதும் பாக்யாவிற்கு இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஆனால் கில்லாடி கோபி, பாக்யா இதைப் பற்றி கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மழுப்பி விடுவான். முட்டாள் பாக்யாவும் அதை நம்பி பூம்பூம் மாடு போல் தலை ஆட்டிக் கொண்டு அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விடுவாள்.

இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர், விரைவில் பாக்யாவை புரட்சிகர பெண்மணியாக காட்டி கோபியை ரவுண்டு கட்ட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News