நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பல அரிய படைப்புகளை தந்துள்ளார். சிவாஜியை மிஞ்சிய நடிப்பில் இன்னொரு நடிகரை தமிழ் சினிமா இன்னும் பார்க்கவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அவ்வாறு சிவாஜி நடிப்பில் வெளியான சிறந்த ஐந்து படங்களை பார்க்கலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் : சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜியின் நடித்திருந்தார்.
திருவிளையாடல் : சிவாஜி கணேசன், சாவித்ரி, நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருவிளையாடல். புகழ்பெற்ற திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் சிவாஜி கணேசன் இறைவன் சிவபெருமானாக நடித்திருந்தார். இப்படத்தில் நாகேஷ் தருமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
கர்ணன் : சிவாஜி கணேசன், என்டி ராமராவ், தேவிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் சிவாஜி நட்புக்கு இலக்கணமான கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ராஜராஜ சோழன் : சிவாஜி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜராஜ சோழன். இப்படம் முதலாம் ராஜராஜ சோழரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் ராஜராஜ சோழனாக சிவாஜி நடித்து இருந்தார். இப்படம் திரையரங்குகளில 100 நாட்கள் மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கந்தன் கருணை : சிவாஜி கணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன், சிவக்குமார், கே ஆர் விஜயா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கந்தன் கருணை. இப்படம் தமிழ் கடவுளான முருகனின் பிறப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றை சுற்றியே படம் அமைந்தது. இப்படத்தில் வீரபாகு தேவனாக சிவாஜிகணேசனும், சிவனாக ஜெமினிகனேசனும், முருகனாக சிவகுமாரும் நடித்திருந்தார்கள்.