தமிழ்சினிமாவில் வெளியாகும் பல படங்களில் இது தான் கிளைமாக்ஸ் என்று ரசிகர்களால் கணிக்க முடியும். ஆனால் சில படங்களில் நாம் கணித்த கிளைமேக்ஸை விட புதிய ட்விஸ்ட் ஆக அமைந்திருக்கும். அவ்வாறு நம்மால் கணிக்க முடியாத க்ளைமாக்ஸ் கொண்ட 5 த்ரில்லர் படங்களை பார்க்கலாம்.
துருவங்கள் பதினாறு : கார்த்திக் நரேன் எழுதி, இயக்கிய திரைப்படம் துருவங்கள் பதினாறு. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருந்தார். இப்படம் ஒரு விபத்து, பெண் கடத்தல் மற்றும் ஒரு தற்கொலையை இந்த மூன்றுக்கும் இடையே ஆன முடிச்சை கருவாக கொண்டு இப்படம் அமைந்தது. இப்படம் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அடுத்தது என்ன என்பதை சஸ்பென்ஸாக எடுத்துச் சென்றது.
கபடதாரி : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி எழுதி, இயக்கி இருந்த படம் கபடதாரி. இப்படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் டிராபிக் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ் கிரைம் டிபார்ட்மெண்டில் பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார். அங்கு சேர்ந்த பின் அவர் சந்திக்கும் இடையூறுகளை எப்படிக் அடைகிறாள் என்பதை கபடதாரி.
சரபம் : அருண் மோகன் இயக்கத்தில் நவீன் சந்திரா, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சரபம். இப்படம் ஆள்மாறாட்டத்தில் கருவாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. ஒரு இறந்து போன பெண்ணின் கழுத்தில் இருக்கும் சரபம் டாட்டூவை வைத்து இறந்தது யார் என்பதை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே சரபம் படத்தின் கதை.
ஜிவி : கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன், ரோகினி மோனிகா ஆகியோர் நடிப்பில் திரில்லர் படமாக வெளியானது ஜிவி. திருட்டு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் கதாநாயகன், திருமணத்திற்கு சேர்த்து வைத்திருக்கும் நகைகளை திருடிகிறார். ஒரு கட்டத்தில் திருடிய நகைகளை கொடுக்கிறார் என்பதே ஜிவி படத்தின் கதை.
தெகிடி : ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெகிடி. டிடெக்டிவ் ஏஜென்ஸியில் வேலைபார்க்கும் ஹீரோ, தான் விசாரிக்கும் நபர்கள் அடுத்த எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் அடுத்ததாக தன் காதலியை தான் கொள்ளப் போகிறார் என்பதை உணர்கிறார். அதிலிருந்த அவரை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை எதிர்பாராத கிளைமஸ் உடன் தெகிடி படம் அமைந்திருக்கும்.