வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வழியில்லாமல் பழைய ரூட்டை பிடித்த சசிகுமார்.. கடன் அதிகமாயிடுச்சின்னு சொல்லுங்க

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக பிரபலமாகிய பலரில் முக்கியமானவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து நாடோடிகள், சுந்தர பாண்டியன் போன்ற படங்களை இயக்கினார்.

அதுமட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அளவிற்கு இப்படத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்துள்ளது. ஆனால் சசிகுமார் சினிமாவில் நடிக்க வந்த பிறகு படங்களை இயக்குவதை தவிர்த்து விட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.

சசிகுமார் ஆரம்பித்தில் நடித்தபடங்கள் வரவேற்பு கிடைத்தாலும் தற்போது அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைகிறது. இதனால் இவருடைய நடிப்பிற்கு சிறந்த வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

சுதந்திர போராட்டத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை வைத்து குற்றப்பரம்பரை எனும் நாவலை வேல ராமமூர்த்தி எழுதி இருந்தார். இயக்குனர் பாரதிராஜா குற்றப்பரம்பரை நாவலை வைத்து தானே நடித்து, படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இருந்தார். ஆனால் பாலா குற்றபரம்பரை படத்தை நான் இயக்க போவதாக அறிவித்தார்.

இதனால் பாரதிராஜா, பாலா இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை ஏற்பட்டது. இது கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு இப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரை படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பாரதிராஜா மற்றும் பாலா இருவரிடமும் அனுமதி பெற்றுள்ளார் சசிகுமார். குற்றப்பரம்பரை நாவலை ஒரு படமாக எடுப்பது கடினம். அதனால் வெப் சீரிஸ் எடுக்க வாய்ப்புள்ளது எனவும் கூறிவருகின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு சசிகுமார் ஒரு படத்தை இயக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Trending News