வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அஜித்துக்கு ஜால்ரா அடிக்கும் இருவர்.. கோபம் தலைக்கேறி கத்திய ஆர்கே சுரேஷ்

தற்போதைய சினிமாவில் உருவ கேலி என்பது ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பல நடிகர்களும் ஒருவரை கேலி செய்து தான் படங்களில் மற்றவர்களை சிரிக்க வைத்து வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி நிஜ வாழ்வில் கூட ஒருவரை உருவ கேலி செய்து கிண்டலடிப்பது அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தைப் பற்றி யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சற்று அதிகப்படியாகவே பேசியிருந்தார். அதாவது அந்த படத்தில் அஜீத் பஜன்லால் சேட்டு போல் இருக்கிறார் என்றும் முகத்தில் தொப்பை இருக்கிறது என்றும் ரொம்ப ஓவராக பேசியிருந்தார்.

இதற்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமிருந்தும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. அதில் நடிகர் ஆரி மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் இருவரும் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி பேசி கிழித்து தொங்க விட்டனர். ஒருவரின் உருவத்தை கேலி செய்து பேசுவது தவறு என்றும் யாரையும் இதுபோன்று கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்களின் இந்த கருத்துக்கு தற்போது ரசிகர்களிடம் பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஏனென்றால் ப்ளூ சட்டை மாறன் இதுபோன்று பலரை கிண்டலடித்து பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் நீங்கள் வராமல் அஜித்திற்காக மட்டும் வருகிறீர்கள் என்றால் அவர் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்ற காரணத்திற்காகவா, இல்லை இதன் மூலம் பப்ளிசிட்டி தேடுகிறீர்களா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் இருவரையும் ஜால்ரா என்றும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த ஆர்கே சுரேஷ் ப்ளூ சட்டை மாறனை பற்றிய கடுமையாக பேசியதற்கு காரணம் ஒருவரை உருவ கேலி செய்யக்கூடாது என்பதற்காகத்தான். அவர் அஜித்தை பற்றி இப்படி பேசியது எனக்கு கடுமையான கோபம் வந்தது அதைத்தான் நான் வெளிப்படுத்தினேன் என்று கூறினார்.

மேலும் அவர் அஜித் அவர்களுக்கு நான் ஒன்னும் ஜால்ரா கிடையாது. அவரைப் பற்றி பெருமையாக பேசினால் எனக்கு அவர் படத்தில் வாய்ப்புக் கிடைக்கப் போவது கிடையாது என் மனதில் பட்டதை தான் நான் பேசினேன் என்று தெரிவித்தார். இருந்தாலும் ரசிகர்கள் அவரை ஜால்ரா சுரேஷ் என்றும் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது ஏன் கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Trending News