செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

மாரடைப்பால் மரணித்த 5 காமெடி நடிகர்கள்.. ஈடுகட்ட முடியாத கிரேசி மோகனின் இழப்பு

சினிமாவில் ஒரு படத்திற்கு கதை, கதாபாத்திரங்கள் என்பதையும் தாண்டி நகைச்சுவை அற்புதமாக அமைந்து விட்டால் அந்த படம் கட்டாயம் ரசிகர்களை கவர்ந்து விடும். அப்படி ரசிகர்களை தங்கள் வாழ்நாள் இறுதிவரை மகிழ்வித்த சில காமெடி நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களில் மாரடைப்பால் இறந்த ஐந்து நபர்களை பற்றி காண்போம்.

மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதோடு இவர் சினிமாவில் ஒரு வில்லனாக, குணச்சித்திர நடிகராக, காமெடியனாக பல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இவர் கடைசியாக நடிகர் சத்யராஜை வைத்து நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அது அவரின் இயக்கத்தில் வெளியான 50வது திரைப்படம். அந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மணிவண்ணன் மாரடைப்பினால் உயிரிழந்தார். இவர் இறந்த இரண்டு மாதங்களிலேயே இவருடைய மனைவியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கிரேசி மோகன் இவர் தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராகவும் சிறந்த வசனகர்த்தாவாகவும் சிறந்து விளங்கியவர். இவரின் சிறந்த வசனத்திற்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். சின்னத்திரை, பெரியதிரை, மேடை நாடகங்கள் போன்று அனைத்திலும் திறமை கொண்டு அசத்திய இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி இவரை நாம் நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதில் தவசி என்ற திரைப்படத்தில் வடிவேலுவிடம் இவர் பின்லேடன் அட்ரஸை கேட்பார். அந்த காட்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரும் கடந்த 2019ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

பாலு ஆனந்த் உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் நடிகை சினேகாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் இவர் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார்.

வடிவேல் பாலாஜி இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர். வடிவேலுவை போன்று நடிப்பதால் தான் இவருக்கு வடிவேல் பாலாஜி என்று பெயர் வந்தது. சின்ன திரையை தொடர்ந்து இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட இவர் கடந்த 2020ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -spot_img

Trending News