தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டிருக்கும். இவருடைய படத்தில் தொப்பி, கண்ணாடி வைத்தே படத்தை முழுவதும் எடுத்து இருப்பார். இவருடைய படங்களை ஹீரோக்களின் முகத்தை முழுவதும் காட்டி இருக்கவே மாட்டார்.
இவருடைய இயக்கத்தில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, பிசாசு, சைக்கோ போன்ற பல படங்கள் மிஸ்கின் உருவாகி உள்ளது. இவருடைய படங்களுக்கு என்றே தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது மிஷ்கின் ஆண்ட்ரியா வைத்து பிசாசு 2 படத்தை இயக்குகிறார்.
மிஷ்கினின் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெறும். இவர் பல பட புரொமோஷன்கள் மற்றும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருப்பார். அங்கு மிஸ்கின் பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அவ்வாறு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு மிஸ்கின் சாதுரியமாக பதிலளிப்பார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மிஸ்கின் பதிலளித்துள்ளார். அதாவது மிஸ்கின் படங்களின் போஸ்டர்களில் மிஸ்கின் பெயர் மட்டும்தான் இடம்பெறுகிறது ஏன் மற்றவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மிஸ்கின் போஸ்டரை பார்த்தால் என்ன படம் என்பது தான் அனைவருக்கும் தோன்றவேண்டும் யார் யார் பெயர் இருக்கிறது என்று யாரும் கவனிக்க மாட்டார்கள், அப்படி பெயர் போட்டால் போஸ்டரே பத்தாது என அந்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மேலும் படத்தின் டிரைலரை பார்க்கும்போது எந்த காட்சி, எந்த மாதிரியான கதை களத்துடன் படம் உருவாகி உள்ளது என்பதை தான் ரசிகர்கள் கவனிப்பார்கள். அதில் யாருடைய பெயர் போட்டு இருக்கிறார்கள் என்பதை கூட கவனிக்க மாட்டார்கள் என மிஸ்கின் நாசுக்காக பதில் அளித்துள்ளார்.