வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

“சாய் வாலே” தொடர்ந்து நயன்தாரா போடும் ஸ்கெட்ச்.. விட்டா அம்பானிக்கே சவால் விடுவார் போல

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சைடு பிசினசில் முதலீடு செய்வார்கள். அன்றைய காலகட்ட நடிகர்களிடம் கூட இந்த பழக்கம் இருந்தது. அந்த வகையில் இப்போது இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களுக்கென ஒரு பிசினஸை தொடங்கி திறம்பட நடத்தி வருகின்றனர்.

அதில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாராவும் சாய் வாலே என்ற ஒரு காபி ஷாப்பை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இயல்பாகவே நயன்தாரா ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் நன்றாக யோசித்துதான் செயல்படுவார்.

அதனால்தான் அவர் எந்தக் காரியத்தை எடுத்தாலும் அது வெற்றிகரமாக முடிகிறது. ஒரு படத்தின் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது ஆகட்டும் ஒரு படத்தை தயாரிப்பது என்று மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். அதனால் தான் இன்று அவர் ஒரு வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது அவர் மேலும் ஒரு பிசினஸை தொடங்க இருக்கிறார். அது என்னவென்றால் உதட்டு சாயம் தயாரிக்கும் ஒரு லிப்ஸ்டிக் நிறுவனத்தை நயன்தாரா ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் பேஷன் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் சமந்தா, டாப்சி, தமன்னா என்று பல நடிகைகளும் பேஷன் சம்பந்தமான தொழில்களை தொடங்கி அதில் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்பதில் நயன்தாரா ஆர்வமாக இருக்கிறார். தற்போது இவரை பார்த்து மற்ற இளம் நடிகைகளும் சொந்த தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Trending News