செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

AK62 – அஜித்துக்கு வில்லனாக மிரட்டப் போகும் கராத்தே மாஸ்டர்.. குஷிப்படுத்திய விக்னேஷ் சிவன்

அஜித் தற்போது வலிமை கூட்டணியுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார். பொதுவாகவே அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்தப் படம் வெளியான பிறகுதான் அவரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

ஆனால் இம்முறை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அஜித் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அஜித் தற்போது நடிக்கவிருக்கும் ஏகே 61 திரைப்படத்தை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தன்னுடைய 62 வது படத்தை தொடங்க இருக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இதனால் அவர்கள் அஜித்தின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்களை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக மற்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதாவது விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி இணைய இருக்கிறார். இவர் ஒரு கராத்தே மாஸ்டராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் புன்னகை மன்னன், பத்ரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் நடிக்க இருக்கிறார்.

இதில் இவர் அஜித்துக்கு எதிரான ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் கூடிய விரைவில் இவரை தமிழில் பல திரைப்படங்களில் பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News