சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தனுஷுக்கு போட்டியாக புது ரூட்டை பிடிக்கும் ஐஸ்வர்யா.. அதிரடியாக வெளிவந்த அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரும், இவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக சமீபத்தில் அறிவித்தனர். இது சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்தும், கணவர் தனுஷும் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள். இதனால் ஐஸ்வர்யாவும் சினிமாவில் தனது பங்கு இருக்க வேண்டும் என படத்தை இயக்கத் தொடங்கினார். தனது கணவர் தனுஷின் 3 படத்தின் மூலம் ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான தென்னிந்திய சர்வதேச விருதையும் ஐஸ்வர்யா பெற்றார். 3 படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் “வை ராஜா வை” படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சனரீதியாக பாராட்டு பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு ஐஸ்வர்யா படங்கள் எதுவும் எடுக்காமல் சினிமா துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த நிலையில் தன் கவலையை மறக்க ஐஸ்வர்யா சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பயணி என்ற காதல் பாடல் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா இயக்கத்தில் 5 மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹைதராபாத்தில் டைரக்ஷனில் பிசியாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அதிலிருந்து குணமாகி மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஓ சாந்தி சால் என்ற படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளார். இப்படம் உண்மையாக நடந்த காதல் கதையை தழுவி எடுக்கப்பட உள்ளது. இப்படத்தை கிளவுட் நைன் பிக்சர்ஸ் மீனு அரோரா தயாரிக்கிறார். ஏற்கனவே தனுஷூம் பாலிவுட்டில் படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவும் போட்டியாக புது ரூட்டை போட்டு ஹிந்தி படத்தை இயக்கவுள்ளார்.

ஓ சாந்தி சால் படத்தை இயக்க இருப்பதாக ஐஸ்வர்யா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதனால் தற்போது ஐஸ்வர்யா தனது முழு கவனத்தையும் சினிமா மீது செலுத்தி வருகிறார்.

Trending News