வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

20 கோடி சம்பளத்தை உதறி தள்ளிய மாஸ் ஹீரோ.. மெய் சிலிர்த்த இயக்குனர் மோகன் ராஜா

தமிழில் தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ராஜா தற்போது தெலுங்கில் தன் கவனத்தை பதித்துள்ளார். அங்கு அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து காட்பாதர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தன் சொந்த தயாரிப்பில் தயாரித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் இது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதற்காக தயாரிப்பு நிர்வாகம் அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து உள்ளது. ஆனால் அந்த பணத்தை சல்மான்கான் வாங்க மறுத்து உள்ளார். இருப்பினும் தயாரிப்பாளர் ராம்சரண் அவரை சம்பளம் வாங்கும் படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

அதற்கு சல்மான் கான் என்னுடைய படத்தில் உங்களை கெஸ்ட் ரோலில் நடிக்க சொன்னால் நீங்கள் சம்பளம் வாங்குவீர்களா என கேட்டுள்ளார். அப்புறம் எனக்கு மட்டும் ஏன் சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று கூறி அன்பாக மறுத்துள்ளார். முன்பெல்லாம் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் அடுத்தவர்களின் படங்களில் இது போன்று கௌரவ தோற்றத்தில் நடிக்க தயங்குவார்கள்.

ஆனால் இப்போது அந்த காலகட்டம் எல்லாம் மாறிவிட்டது. முன்னணியில் இருக்கும் பல நடிகர்களும் தங்களுக்கு நட்புறவாக இருக்கும் நடிகர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து அசத்துகின்றனர். அதிலும் பாலிவுட்டில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.

அதனால்தான் சல்மான்கான் சிரஞ்சீவியுடன் இருக்கும் நட்பின் காரணமாக இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததற்கு சம்பளம் வாங்க மறுத்து உள்ளார். அவர் சம்பளம் வாங்காமல் நடித்த இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Trending News