தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அந்த பிரபல நடிகை. இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல புகழைத் தேடிக்கொடுத்தது. அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் தலைகாட்டிய இவர் பிறகு வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு காணாமல் போனார்.
சரியான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த இவருக்கு பிரபல சேனல் மூலம் ஜாக்பாட் அடித்தது. நடிகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி அவரே எதிர்பார்க்காத அளவுக்கு ஏராளமான ரசிகர்களையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது. இதற்கு காரணம் நடிகையின் வெகுளியான குணம்.
அந்த குணத்தை பார்த்து பிடித்துப் போன ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதன்பிறகு நடிகைக்கு ஒருசில வாய்ப்புகள் கிடைத்தும் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் நடிகை தற்போது படவாய்ப்புகள் இன்றி இருக்கிறார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட சேனல் மீண்டும் அவரை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். நடிகையை காண காத்திருந்த ரசிகர்களுக்கு இதனால் ஏமாற்றமே கிடைத்தது. இருக்கும் ரசிகர்களின் அன்பை தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்பதுதான் நடிகையின் முடிவாம்.
தற்போது நடிகை தன் முதல் படத்தில் ஜோடி போட்டு நடித்த அந்த நடிகருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறாராம். அந்த நடிகருக்கும் எந்த பட வாய்ப்புகளும் சரிவர அமையாத நிலையில் சமீபத்தில் நடித்த அந்த வெப் தொடர் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இதனால் நடிகருக்கு பட வாய்ப்புகளும் தற்போது வந்து கொண்டிருக்கிறது.
இதைப்பார்த்த நடிகை எப்படியாவது நடிகருடன் சேர்ந்து நடித்து மீண்டும் தன் இடத்தை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார். இதற்காக நடிகரிடம் அவர் பேசி வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இதனால் கூடிய விரைவில் நடிகையின் புது பட அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.