வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

உங்க கண்ணுல மரண பீதியை பார்த்துட்டோம் கோபி அங்கிள்.. வெளுத்து வாங்கிய பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து பெற்றுள்ளார் கோபி. இந்நிலையில் அடிக்கடி கோபி தனது காதலி ராதிகா வீட்டிலும் தங்கி வருகிறார். இந்நிலையில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் கோபியின் மூத்த மகன் செழியன்.

செழியன் கிறிஸ்துவ மத பெண்ணான ஜெனியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஜெனி கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையினால் தனது மாமியார் மற்றும் குடும்பத்தின் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளார். ஆனால் இது செழியனுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் ஜெனியால் ஏதாவது ஒரு பிரச்சனையை சந்திக்கும் செழியன் எல்லார் முன்னாடியும் ஜெனியை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார். அப்போது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் பாக்யா ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் கடைசிவரை என்ன பிரச்சினையாக இருந்தாலும் அவளோடு தான் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

அதை விட்டுட்டு பாதியிலேயே விட்டுவிட்டு போறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்றீங்கபண்றீங்க என கோபியை பார்த்து பாகியா காரசாரமாக பேசுகிறார். இதைக்கேட்ட அரண்டு போன கோபி எப்போதும் போல மாட்டிக் கொண்டு முழிக்கும் போது கொடுக்கும் கண் ரியாக்சனை கொடுக்கிறார்.

இந்நிலையில் செழியன் எதார்த்தமாக சொன்னதற்கு பத்ரகாளியாக மாறிய பாக்கியா, நிஜமாகவே கோபி பாக்யாவை விவாகரத்து செய்தது தெரியவந்தால் என்னவாகும் என்ற பீதியில் உள்ளார் கோபி. அதுவும் கோபி, ராதிகாவை தான் திருமணம் செய்யப் போகிறார் என்றால் என்ன நடக்கும்.

இதனால் பல டுவிஸ்டுகள் உடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது. இந்நிலையில் எப்போதும் போல கோபி ஏதாவது செய்து அந்த சிக்கலில் இருந்து தப்பித்து விடுகிறார் அல்லது மாட்டிக் கொள்கிறாரா என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Trending News