ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வலிமை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது. தற்போது வரை வலிமை படம் திரையரங்குகளில் ஓடிவருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்பு வலிமை படம் வெளியானதால் இப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. வலிமை படம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் 200 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வலிமை படம் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரி குவித்துள்ளது.

இந்நிலையில் வலிமை படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. வலிமை படத்தை மிகப் பெரிய தொகை கொடுத்த ஜீ 5 நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஜி5 ஒடிடி தளத்தில் மார்ச் 25ஆம் தேதி வலிமை படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மொழிகளில் வெளியாக உள்ளது.

ஆனால் வலிமை படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் உடனடியாக ஓடிடியில் வெளியானது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலிமை படம் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் ஓடிடியில் வெளியானால் அது ரசிகர்கள் மத்தியில் தோல்வி படமாக கருதப்படும்.

ஆனால் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களுடன் பிந்தைய வெளியீட்டு ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ5 பெற்றுள்ளது. இதனால் இப்படங்களும் வெளியான சில மாதங்களிலேயே ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் அஜித் தனது வலிமை படத்திற்கே இரண்டு ஆண்டுகள் எடுத்துகொண்ட நிலையில் அடுத்தடுத்த படங்களை விரைவில் முடிக்க வேண்டும் என அதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வலிமை படத்தின் கூட்டணியில் ஏகே 61 படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்திலும் அஜித் நடிக்கவுள்ளார்.

Trending News