ரஜினியைப் போல் அஜித்துக்கு தோன்றிய எண்ணம்.. விருப்பமே இல்லாமல் எடுத்த தில்லான முடிவு

சினிமா பின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமையால் மட்டுமே அஜித் தற்போது எட்ட முடியாத உயரத்தில் உள்ளார். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்து அஜித் தன்னை தானே செதுக்கிக் கொண்டு இன்று பல ரசிகர்களுக்கும் வெளிச்சமாக உள்ளார்.

இவருடைய படங்களை காட்டிலும் இவரின் நற்பண்பு எல்லோரையும் கவர்ந்தது. இதனாலேயே அஜித்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒருவருக்கு எதன் மீது அதிக ஆர்வம் உள்ளதோ அதன் மீது அதிக ஈடுபாடுபால், ஒரு கட்டத்திற்கு மேல் அதை வெறுக்கும் அளவுக்கு தோன்றும்.

அவ்வாறு அஜித்துக்கு நடிப்பின் மேல் அதீத பிரியம் இருந்துள்ளது. அஜித் கிட்டத்தட்ட 60 படங்கள் நடித்துள்ள நிலையில் அவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. நடிப்பைத் தாண்டி பைக் ரேசிங் போல பல புதுப்புது வித்தியாசமான கலைகளைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் அஜித்.

இதை போல் தான் ரஜினியும் ஒரு காலத்தில் நடிப்பு போதுமென்று நடிப்பை விட வேண்டுமென்று எண்ணினார். அதன்பின் பாலச்சந்தர் அவருக்கு அறிவுரை வழங்கி மீண்டும் நடிக்க தூண்டினார். ஆனால் தற்போது வரை அஜித் தொடர்ந்து படங்களில் நடித்து தான் வருகிறார்.

இதற்கு காரணம் என்னவென்றால் அவருடைய ரசிகர்களுக்காக மட்டுமே அஜித் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு வலிமை படம் வெளியாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இடைவெளி இருந்தது. இதையே அஜித் ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அஜித் ரசிகர்கள் அடிக்கடி வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானால் அதையே திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் அஜித் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டார் என்றால் அவரது ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளவர்கள்.

இதையெல்லாம் மனதில் கொண்டு தான் அஜித் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வலிமை படத்திற்கு மிகப்பெரிய பிரேக் எடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களை ரசிகர்களுக்கு விரைவாக கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பல படங்களில் அஜித் ஒப்பந்தமாகியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →