வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெற்றிமாறன் தான் வேண்டும்.. ராஜமௌலி பட ஹீரோக்கள் செய்யும் அட்டகாசம்

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக பல திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அந்தப் படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று நாம் படத்தை பார்க்காமலே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் பெரிய இடைவெளி எடுத்துக் கொண்டாலும் அந்த படம் நிச்சயமாக ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

இதனால் இவருக்கு தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. மேலும் தமிழில் நடிகர் தனுஷுக்காக இவர் பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். பொதுவாக தனுஷ் படம் என்றால் எல்லா சென்டர்களிலும் பட்டையை கிளப்பும்.

அப்படி அவர் தனுஷுக்காக பொல்லாதவன், வடச்சென்னை, அசுரன், ஆடுகளம் போன்ற ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படங்கள்தான் தனுசை இன்று சினிமாவில் ஒரு முக்கிய இடத்திற்கு கொண்டு சென்றது. மேலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனுஷ் பின்னி பெடல் எடுப்பார் என்று அனைவரும் கூறுவதற்கும் இந்தப் படங்கள் தான் முக்கிய காரணம்.

தற்போது வெற்றிமாறனை பார்த்து பிரபல தெலுங்கு நடிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர்.

மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களையும் பார்த்து இவர்கள் மிரண்டு விட்டார்களாம்.

இதனால் நாங்கள் தமிழில் படம் நடித்தால் அது நிச்சயம் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமாகத்தான் இருக்கும் என்று அவர்கள் ராஜமவுலியிடமே கூறி அட்டகாசம் செய்தார்களாம். தற்போது தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமாக இருக்கும் இவர்கள் இருவரும் வெற்றிமாறனுடன் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News