காதல் படம் பரத், சந்தியா நடித்து சூப்பர் ஹிட்டான படம். ஐஸ்வர்யா மற்றும் முருகன் கதாபாத்திரத்தின் பெயர்களை இன்றுவரை மறக்கவே முடியாது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்
இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவர் இந்தப் படத்திற்கு முதலில் மனதில் வைத்த ஹீரோ கதாபாத்திரம், காதல் படத்தில் நடித்த மணிகண்டன் தானாம். ஒரு பைக் மெக்கானிக், ஹீரோ முகத்திற்கு ஏற்ற மாதிரி மணிகண்டன் இருந்தாராம்.
அதன் பின்னர் படத்தில் டெஸ்ட் காட்சிகள் எடுக்கும்போது மணிகண்டன் மற்றும் சந்தியா இருவருக்கும் காதலர்களாக பொருந்தவே இல்லையாம். மணிகண்டனை பார்த்தால் ஒரு காதலிக்கும் பையனாக தெரியவில்லையாம். மாறாக ஒரு ரவுடி முகம் தெரிந்ததாம்.
அதனால் அவரை நீக்கிவிட்டு பாய்ஸ் படத்தில் நடித்த மற்றுமொரு நடிகரான பரத்தை, ஹீரோவாக போட்டுள்ளனர். ஆனால் பரத், பார்ப்பதற்கு ரொம்பவும் கலராக இருந்ததால் அவரையும், டெஸ்ட் ஷாட்டில் மெக்கானிக் அழுக்கு பையன் போல் மாற்றியுள்ளனர்.

இவர்களுக்கு முன்னதாகவே இந்த படத்தில் நடிக்க தனுஷிடம் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அந்த சமயத்தில் தனுஷ் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்று இருந்தாராம். அதனால் மலேசியாவிற்கு சென்று அந்த கதையை சொல்லியிருக்கிறார்.
படத்தின் கதை தனுஷிற்கு ரொம்ப பிடித்துப் போனதாம். ஆனால் அதில் முருகன் என்னும் கதாபாத்திரம், கிளைமாக்ஸ் காட்சியில் பைத்தியமாக சுற்றுவது அவருக்கு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.