கலைஞரை சமாதானப்படுத்திய எம்ஜிஆர்.. விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த நட்பு சரித்திரம்

தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. அவர் அரசியலில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். அவரின் வசனத்தில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

அந்தவகையில் இவர் திரைக்கதை அமைத்து எம்ஜிஆர் நடித்த திரைப்படம் மலைக்கள்ளன். இந்தப் படத்தை ஸ்ரீ ராமுலு நாயுடு தயாரித்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் போது இவருக்கும் கலைஞருக்கும் சின்ன மனகசப்பு ஏற்பட்டு அதனால் கலைஞர் மிகவும் கோபமாக இருந்துள்ளார்.

அந்த கோபத்தால் அவர் தன் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று விட்டாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்ஜிஆர் கலைஞரை சமாதானப்படுத்துவதற்காக அவருடைய ஊருக்கே சென்றுள்ளார். அங்கு சென்று அவர் கலைஞரை ஒருவழியாக சமாதானப்படுத்தி கூட்டி வந்துள்ளார்.

மீண்டும் கலைஞரை சந்தித்த ஸ்ரீ ராமுலு நாயுடு நீங்கள் கோபம் குறைந்து சமாதானம் ஆன பிறகுதான் நான் இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவேன் என்று கூறினாராம். இதனால் நெகிழ்ந்து போன கலைஞர் உடனே அவரை கட்டித்தழுவி கொண்டு தன் கோபத்தை எல்லாம் விட்டு சமாதானம் அடைந்தாராம்.

அதன் பிறகே மலைக்கள்ளன் திரைப்படம் வெளியானது. கலைஞரின் கைவண்ணத்தில் உருவான அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று எம்ஜிஆருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது. அதன்பிறகு கலைஞரும் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதினார்.

இப்படி அந்தக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு கோபம் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுக்கொடுத்து நட்புடன் பழகி வந்தனர். பின்னாளில் கலைஞர் மற்றும் எம்ஜியார் அரசியலில் தனித்தனித் துருவமாக இருந்த போதிலும் அவர்கள் கொள்கையில் தான் பிரிந்து இருந்தனரே தவிர அவர்களின் நட்பு அப்படியேதான் இருந்தது.