புதன்கிழமை, ஜனவரி 1, 2025

மஞ்சிமா மோகனுக்கு நடந்த பெரும் சோகம்.. அவரால் சினிமா வாய்ப்பை இழந்த பரிதாபம்

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டும் கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் மஞ்சிமா மோகனுக்கு திருமணம் நடக்க இருப்பதாக ஒரு செய்தி சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் மிக வேகமாக பரவி வந்தது. அவர்கள் இருவரும் தமிழில் தேவராட்டம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அப்போதிலிருந்தே இவர்கள் இருவருக்கும் காதல் இருந்ததாக கூறப்பட்டது. அதனால் இந்த வருட இறுதிக்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்ற செய்தியும் வெளியானது. இதை கௌதம் கார்த்திக்கும் உறுதி செய்தார். ஆனால் இந்த தகவலுக்கு மஞ்சிமா மோகன் எனக்கு திருமணம் என்பது இப்போது கிடையாது என்று அந்த தகவல்களை மறுத்து பேட்டி கொடுத்தார்.

அதனால் இந்த திருமண செய்தி வெறும் வதந்தி ஆகிப் போனதில் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகனுக்கு தற்போது வரவிருந்த புது பட வாய்ப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் எப்ஐஆர் திரைப்படத்தின் இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய இருந்தார்.

தற்போது அந்தப் பட வாய்ப்பும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகிறது அதனால் எங்கள் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று பட வாய்ப்பு கொடுத்த அனைவரும் தற்போது மறுப்பு தெரிவித்து வருகிறார்களாம்.

இந்த செய்தியால் மஞ்சிமா மோகன் தற்போது மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். இது யதார்த்தமாக நடந்ததா அல்லது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து பேட்டி கொடுத்ததால் கௌதம் கார்த்திக் இப்படி ஒரு சதி வேலையை செய்தாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் தற்போது மஞ்சிமா இந்த அதிர்ச்சியான தகவலால் விழிபிதுங்கி இருக்கிறார்.

Trending News