திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கும் சீசன் 3 போட்டியாளர்.. சண்டையில் இனி மண்டை உடைவது கன்ஃபார்ம்

டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்காக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மிக சுவாரசியமான போட்டியாளர்களை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து தானாகவே வெளியேறிவிட்டார். அதன்பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி உடல்நிலை பிரச்சனையால் பிக் பாஸ் அல்டிமேட் இலிருந்து வெளியேறினார். இதனால் தற்போது இந்நிகழ்ச்சிக்கு புது என்ட்ரி ஆக ஒருவர் வர உள்ளதால் அது யாரென்று இணையத்தில் பல பெயர்கள் வெளியானது.

யாரும் எதிர்பார்க்காத சாண்டி மாஸ்டர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு செல்ல உள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்களிடையே சாண்டி பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கவின் மற்றும் சாண்டியின் காமெடி, கானா பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

சாண்டி மாஸ்டர் நிகழ்ச்சியில் முதல் ரன்னர் அப் ஆனார். இப்போது சாண்டி மாஸ்டர் கமலின் விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சாண்டி பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி இருந்தார்.

சாண்டி மாஸ்டர் எல்லோரையும் எளிதில் பழகக் கூடியவர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக சண்டை, சர்ச்சைகள் உருவாகும். சாண்டி எல்லாவற்றையும் கிண்டலும், கேலியுமாக நகைச்சுவையாக கையாளக் கூடியவர். ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 3 இல் இவருக்கும், மோகன் வைத்தியாவுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்படும்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரை, அனிதா, பாலா, நிரூப் எல்லோரும் உடனே கோபப்படக் கூடியவர்கள். இதனால் சாண்டி மாஸ்டரின் பேச்சால் பல சண்டைகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சாண்டி மாஸ்டர் சண்டை போட்டாலும், அவர்களோடு உடனே போய் பேசும் குணம் உடையவர். இதனால் சாண்டி எனட்ரியால் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Trending News