திரை உலகை மிரள வைத்த சிவாஜி.. ஒரே படத்தில் செய்த 5 சாதனைகள்

தற்போது வரை சிவாஜியின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவருடைய நடிப்பை யாராலும் ஈடு கொடுக்க முடியாது. இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கப்பதக்கம். 1974 ஆம் ஆண்டு பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் கண்டிப்பான மற்றும் உறுதியான போலீஸ் அதிகாரியாக எஸ் பி சாவித்ரி கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை தனது அற்புதமான நடிப்பின் மூலம் சிவாஜிகணேசன் காட்டியிருந்தார்.

இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற சோதனை மேல் சோதனை, நல்லதொரு குடும்பம் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. 1974 ஆம் ஆண்டு வெளியான படங்களில் தங்கப்பதக்கம் படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது.

அதுமட்டுமல்லாமல் அந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் தங்கப்பதக்கம் படத்திற்கு கிடைத்தது. இப்படத்திற்கு முந்தைய ஆண்டான 1973 வரை வந்த எல்லா படங்களின் வசூலையும் தங்கப்பதக்கம் முறியடித்துள்ளது. தங்கப்பதக்கம் படம் சாந்தி தியேட்டரில் மட்டும் 103 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது.

சாந்தி தியேட்டரில் உள்ள 1200 இருக்கைகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் திரளாக வந்து இப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மகேந்திரன் எழுதிய தங்கப்பதக்கம் என்ற நாடகத்தில் அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே நாடகமாக வெளிவந்த மக்கள் மத்தியில் சாதனை படைத்த பெருமை தங்கப்பதக்கம் படத்திற்கு உண்டு.

தங்கப்பதக்கம் படம் பங்காரு பதக்கம் என 1976 இல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதன்பிறகு இப்படம் கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்ட வெளியானது. ஓரு படம் இவ்வளவு சாதனை படைக்க முடியும் என்றால் அது சிவாஜி படமாக மட்டுமே இருக்க முடியும்.