வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரன் 2 படத்தை இயக்கப் போகும் லிங்குசாமி.. மாதவனுக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்

லிங்குசாமி இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரன். மின்னலே, அலைப்பாயுதே போன்ற படங்களின் மூலம் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனை ஆக்சன் ஹீரோவாக காட்டிய படம் ரன்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி ரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. லிங்குசாமி தற்போது தி வாரியர் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கி வருகிறார்.

ரன் படத்தின் கதாநாயகி மீரா ஜாஸ்மின் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கி அதிலும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

அதனால் ரன் 2 படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் மாதவன் தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளதால் இப்படத்தில் அவருக்கு பதிலாக விஜய் தேவர்கொண்டாவை வைத்து எடுக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினை நடிக்க வைப்பார்களா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த விவேக் மற்றும் ரகுவரன் தற்போது இல்லை.அதனால் ரன் படத்தில் நடித்த பெரும்பாலானோர் ரன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை.

இதனால் வேறு நடிகர், நடிகைகளை வைத்து தான் இப்படத்தை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. ரன் படத்தில் ஷட்டர் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால் இப்படத்திலும் ஏதாவது புதிய முயற்சியை லிங்குசாமி கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News