வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

எழிலிடம் கையும், களவுமாக மாட்டிக்கொண்ட கோபி.. 50 வயதுனு அங்கிள் மறந்துட்டார் போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது பல திருப்பங்களுடன் வர இருக்கிறது. இத்தொடரில் கோபியை தவிர பாக்கியா குடும்பம் அனைவரும் ஒரு ரிசார்ட்டுக்கு சென்று உள்ளனர். அதே இடத்திற்கு கோபி, மயூ, ராதிகா மூவரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோபித் தனது குடும்பத்தில் யார் கண்ணிலாவது பட்டால் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும் வாய்ப்புள்ளது. ஜெனி மற்றும் செழியன் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி தங்களது காதலை பரிமாறிக் கொள்கிறார்கள்.

கோபி ரிசார்ட்டில் ராதிகாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இனியா அனுப்பிய போட்டோக்களை பார்க்கிறார். அந்த போட்டோவை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். ஏனென்றால் இதே ரிசார்ட்ருக்கு தான் கோபியின் குடும்பமும் வந்துள்ளது. இதனால் இங்கிருந்து எப்படியாவது உடனே கிளம்ப வேண்டும் என கோபி முடிவெடுக்கிறார்.

மயூ, ராதிகா இருவரையும் வேறு ஒரு ரிசார்ட்ருக்குற்கு போகலாம் என சொல்லி சீக்கிரமாக இருவரையும் கோபி அழைத்து செல்கிறார். அவர் காரில் ஏறும்போது பின்னாலிருந்து எழில் பார்த்துவிடுகிறார். ஆனால் கோபி ஒரு பெண்ணுடன் செல்கிறார், அது யார் என்பது எழிலுக்கு தெரியவில்லை.

இதனால் எழில் அது யார் எனும் தேடும் முயற்சியில் இறங்குவார். ஆனால் எழிலுக்கு அந்தப் பெண் ராதிகா தான் என்று தெரிய வந்தால் பாக்கியலட்சுமி தொடரில் பல திருப்பங்கள் வர வாய்ப்புள்ளது. ஆனால் ஏற்கனவே உண்மை தெரிந்த கோபியின் தந்தைக்கு பக்கவாதம் வந்த நிலையில் தற்போது எழிலுக்கும் ஏதாவது பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

இதனால் இதிலிருந்தும் கோபி தப்பித்துவிடுவார். ஆனால் இந்த உண்மை ராதிகாவுக்கு மட்டும் தெரிந்தால் கோபி நிலை தான் மிகவும் பரிதாபம். அதுமட்டுமல்லாமல், கோபி எப்போது இரு குடும்பத்திடமும் ஒரே நேரத்தில் மாட்டுவார், அப்போது அவரது ரியாக்ஷன் என்ன என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News