வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆலியாவுக்கு 2வது குழந்தை என்ன தெரியுமா? சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இத்தொடரில் நடித்த கதாநாயகன் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொண்டால் சின்னத்திரை வாய்ப்புகள் இழக்க நேரிடும் என பலரும் பயப்படுவார்கள். ஆனால் ஆலியா மானசாவுக்கு ஒரு வருடத்திற்குள் ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஆலியா மானசா ராஜா ராணி2 தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாக இருந்தார். தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் இத்தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் பிரசவம் நெருங்கும் காலம் என்பதால் இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். சமீபத்தில் ஆலியா மானசாவின் வளைகாப்பு வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

தற்போது ஆலியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் குழந்தையை சஞ்சீவ் தனது கையில் வாங்கும் புகைப்படத்தை ஆலியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ஆலியா மற்றும் சஞ்சீவ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சஞ்சீவ் ஏற்கனவே பேட்டி ஒன்றில் ஐலா மாதிரி ஒரு லைலா வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனால் சஞ்சீவ் மீண்டும் பெண் குழந்தையை எதிர்பார்த்து இருப்பார் போல. சஞ்சீவ் தற்போது சன் டிவியில் கயல் தொடரில் நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா ராஜா ராணி 2வில் பிரசவத்திற்கு மட்டுமே விடுப்பில் உள்ளார் மீண்டும் ராஜா ராணி2 தொடரில் நடிப்பார் என்ற செய்தி வெளியானது. இவருக்கு பதிலாக இப்போது இத்தொடரில் ரியா நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி 2 தொடரில் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

alya-baby
alya-baby

Trending News