ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜிம் போகாமல் கட்டுமஸ்தான உடம்பிற்காக பழைய நடிகர்கள் செஞ்ச வேலை.. எம்ஜிஆர் முதல் சிவகுமார் வரை

தற்போது உள்ள நவீன காலத்தில் எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சிக் கூடங்கள் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்கும். ஆனாலும் சில நடிகர்கள் அந்த காலத்திலேயே தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பல முயற்சிகள் செய்துள்ளனர்.

எம்ஜிஆர் : ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை எம்ஜிஆர் தன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது எம்ஜிஆரின் தோட்டத்தின் உள்ளேயே தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் காலை எழுந்ததும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றை எம்ஜிஆர் கொள்வாராம். இத்துடன் வால்சண்டை மிகுந்த ஈடுபாடு கொண்ட எம்ஜிஆர் சில சமயங்களில் அந்தப் பயிற்சியையும் மேற்கொள்வாராம்.

ஜெய்சங்கர் : எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜெய்சங்கர். இவர் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெய்சங்கர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உபகரணங்களை சொந்தமாக வாங்கி வீட்டில் வைத்து தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

ஜெமினி கணேசன் : காதல் மன்னன் ஜெமினி கணேசன் தன்னை எப்பொழுதும் இளமையாக வைத்துக் கொள்ள அதிகாலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பாராம். அதன்பிறகுதான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தாராம். ஜெமினி கணேசன் தன் தோற்றத்தால் பல பெண்களை கவர்ந்தார்.

சிவாஜி கணேசன் : சிவாஜி கணேசன் போல் நடிக்கவும், வசனம் பேசவும் யாராலும் முடியாது. தன்னுடைய தத்துரூபமான நடிப்பால் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இவர் தனது உடம்பை தடகாத்திரமாகவும் வைத்துக்கொள்ள தினமும் தண்டால் போன்றவற்றை எடுத்து உடம்பை கட்டுகோப்பாக வைத்து இருந்தார்.

சிவக்குமார் : சிவக்குமார் உடைய மகன்கள் தற்போது ஹீரோவாக நடிக்க வந்தும் இவர் இளமையாகவே உள்ளார். ஏனென்றால் சிவக்குமார் தினமும் யோகாசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்க கூடியவர். அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள அனைத்து கலைகளையும் கற்று இருக்கிறார். மேலும் இவருடைய உணவு பழக்கவழக்கமும் இன்றுவரை இளமையாக இருக்க காரணம்.

Trending News