வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

முல்லையை நினைத்து வருந்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. இத வச்சே இன்னும் 500 எபிசோடு ஓட்டுவாங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குடும்ப ரசிகர்களை கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை முல்லை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லை மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்.

முல்லையின் பெற்றோர் தங்களுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வாரிசு இல்லையே என்பதை நினைத்து வருந்துகிறார்கள். அத்துடன் முல்லை மீது அதீத பாசம் வைத்திருக்கும் கதிரை நினைத்து முல்லையின் பெற்றோர் கொஞ்சம் மன நிம்மதியாக உள்ளனர்.

இந்நிலையில் முல்லை ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லல என்று கதிரிடம் கேட்கிறார்கள். அப்பவே சொன்னான் நீ இது மாதிரி தான் பண்ணுவேன்னு எனக்கு தெரியும் அதுவா தெரியும்போது தெரியட்டும் என இருந்தேன் என கதிர் சொல்கிறான்.

முல்லை, என்னை வெறுத்து விட மாட்டீங்களே என கதிரிடம் சொல்லி அழுகிறாள். ஒரு வழியாக முல்லையை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். அதன் பிறகும் முல்லையை நினைத்து கதிர் கவலைப்படுகிறார். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் முல்லையின் நிலையைப்பற்றி வருந்தி பேசுகின்றனர்.

அப்போது மீனா சிறிதுகாலம் பொறுத்தால் இயற்கையாகவே முல்லை கர்ப்பமாக வாய்ப்பு இருக்கு என்று கூறுகிறார். ஆனால் தனம் குழந்தை பிறக்காது என்று தெரிய வந்த பின்பு நேரம் கடத்துவது தேவை இல்லாதது. இதனால் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என தனம் கூறுகிறாள்.

உடனே மூர்த்தியும் எவ்வளவு செலவு ஆனாலும் முல்லைக்கு சிகிச்சை செய்து குழந்தை பாக்கியம் பெற வைக்க வேண்டும் என பேசுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல திருப்பங்கள் வர காத்திருக்கிறது. இந்நிலையில் முல்லைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம்.

Trending News