விஜயகாந்த் தற்போது உடல் நலத்தை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் தற்போது வரை அவர் நலம் பெற்று திரும்பவும் சினிமாவுக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். ஏனென்றால் விஜயகாந்த் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
அவ்வாறு விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முக்கியமான காரணம் எம்ஜிஆர் தான். விஜயகாந்த் எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்று கூட சொல்ல சொல்லக்கூடாது ஏனென்றால் எம்ஜிஆரின் மீது தீவிர பக்தனாக இருந்தார் விஜயகாந்த். அவரை தனது குருவாக நினைத்து சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார் விஜயகாந்த்.
சென்னை வந்த பிறகு எம்ஜிஆரை எப்படியாவது நேரில் சந்தித்த விட வேண்டும் என விஜயகாந்த் பல முயற்சிகள் செய்துள்ளார். அப்போது எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனதால் அவரை சந்திக்க மிகுந்த கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்துக்கு கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கலைஞர் விஜயகாந்தின் மீது காட்டிய பாசம், அவரையும் பாசத்தால் கட்டிப் போட்டது. இதனால் இருவரும் ஒரு தந்தை, மகன் உறவுவாக நாளடைவில் மாறியது. ஆனால் விஜயகாந்திற்கு எம்ஜிஆரிடம் கிடைக்காத பாசம் கலைஞர் இடத்தில் இருந்து கிடைத்தது.
ஆனால் விஜயகாந்த் ஒருபோதும் எம்ஜிஆரை ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுத்ததில்லையாம். அதன் பிறகு கலைஞர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது கலைஞர் ஆட்சியில் விஜயகாந்திற்கு எம்ஜிஆர் விருது கலைஞரால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. எம்ஜிஆர் யாரேனும் உதவி கேட்டு வந்தால் இல்லை என்று சொல்ல மாட்டாராம். அவர் வீட்டில் எப்போதும் அன்னதானம் நடந்து கொண்டேதான் இருக்குமாம்.
அதேபோல்தான் விஜயகாந்தும் தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வாராம். பலருக்கு சினிமா வாய்ப்பே விஜயகாந்த்தான் பெற்று தந்துள்ளார். விஜயகாந்த் ஒரு காலத்தில் எம்ஜிஆரின் பக்தராகவே மாறி விட்டார், அதனால் என்னவோ அவரின் அரசியல் வாழ்க்கையில் கருப்பு எம்ஜிஆர் என்று அழைத்தனர் மக்கள்.