சைரன் வெச்ச வண்டி, எஸ்கார்ட் ஆட்கள்.. பல கோடிகளை ஏமாந்த நடிகர் விக்னேஷ்

நடிகர் விக்னேஷ் சினிமாவில் பெரிய அளவில் வளராவிட்டாலும் தற்போது வாழ்க்கையை ஓட்ட கூடிய அளவிற்கு ஏதோ ஒரு தொழில் செய்து வாழ்ந்து வருகிறார். சமீபகாலமாக எந்த பேப்பரை திருப்பினாலும், விக்னேஷ் ஏமாந்த கதைதான் போய்க்கொண்டு இருக்கிறது. அவரை ஒரு கும்பல் பல கோடிகள் ஏமாற்றி விட்டதாக அவரே பேட்டி கொடுத்து வருகிறார்.

விக்னேஷ் பியூட்டி பார்லர், சலூன் நடத்தி வருகிறார். இவர் கடைக்கு எஸ்கார்ட் ஆட்கள், சைரன் வைத்த வண்டி என்று அமர்க்களப்படுத்தி இருக்கிறார் அந்த ஆள். அதுமட்டுமின்றி உள்ளே வந்ததும், பியூட்டி பார்லரில் இருக்கிற டவல், தண்ணி என்று எதையும் உபயோகிக்காமல், அவர்கள் கொண்டு வந்த தரமான பொருட்களை தான் யூஸ் பண்ணுவார்களாம்.

இதையெல்லாம் பார்த்து ஏமாந்து போயிருக்கிறார் நடிகர் விக்னேஷ். மேலும் அவர் நீங்கள் நடிகர் விக்னேஷ்தானே என்று அறிமுகமாகி, அவரிடம் நட்பாக பழகி இருக்கிறார் அந்த கும்பலின் தலைவன் ராம் பிரபு.

மேலும் ராம் பிரபு, தான் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா-வில் உயரிய பதவியில் இருப்பதாகவும், என் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. அந்த பணத்தை பரிவர்த்தனை செய்ய, உங்களைப்போல் கடினமாக உழைக்கும் ஒரு நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று விக்னேஷ் இடம் கூறியிருக்கிறார்.

அவர் இனிப்பான பேச்சில் விழுந்த விக்னேஷ், அவருக்கு உதவி செய்து இருக்கிறார். இப்படி பேசியே ராம் பிரபு என்னும் அந்த நபர், விக்னேஷ் இடம் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி உங்களை வைத்து நான் படம் எடுக்கிறேன் என்று கூறி அவருடைய சொத்துக்களையும் விற்க வைத்து, அதில் வந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விட்டாராம். கடைசிவரை இதையெல்லாம் தெரியாத விக்னேஷ் முழுவதும் இழந்ததை அடுத்து தற்போது சுதாரித்து கம்ப்ளைன்ட் பண்ணி வருகிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →