ஆர்ஆர்ஆர் முன்றே நாளில் இத்தனை கோடி வசூலா.? மொத்த பட்ஜெட்டையும் அள்ளிடாங்க

பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர்தான் ராஜமவுலி, அவர் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது மக்கள் குடும்பத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர், இதைத்தவிர வசூலில் வேட்டையாடி வருகிறது என்றே கூறலாம்.

அதற்கு காரணம் படத்தின் வசூலையும் அள்ளிவிடலாம் இதன் மூலம் தனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பதுதான். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் படம் பார்த்தாலே வெற்றி அடைந்து விடும்.

ஆனால் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் போன்ற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளதால் வடமாநிலங்களிலும் இப்படம் நல்ல வசூலை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நிலையில் இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் நம்ப முடியாதது போல் எடுத்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டினர். அதாவது ஜூனியர் என்டிஆர் தோள்பட்டையில் அமர்ந்து ராம்சரண் துப்பாக்கியால் சுடும் காட்சிகளை எல்லாம் நம்ப முடியாதது போல் உள்ளது. மேலும் படம் முழுக்க சிஜி ஒர்க்கு தான் இடம்பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

என்னதான் படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் வசூல் ரீதியாக ஆர்ஆர்ஆர் படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது மூன்றே நாட்களில் 500 கோடி வசூல் செய்துள்ளது. இதேபோல் பாகுபலி 2 திரைப்படம் 3 நாட்களில் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இப்படம் பாகுபலியை விட அதிக வசூலை பெறும் என பலரும் கூறிவருகின்றனர். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான பாகுபலி படம் 3 நாட்களில் 500 கோடி வசூல் செய்தது. ஆனால் பாகுபலி படம் அளவிற்கு எதிர்பார்ப்பு ஆர்ஆர்ஆர் படத்திற்கு இல்லாமல் இருந்தாலுமே 3 நாட்களில் 500 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் பாகுபலியை விட ஆர் ஆர் ஆர் படம் அதிக வசூல் பெரும் என கூறப்படுகிறது.