நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இடத்தை தற்போது வரை யாராலும் நிரப்ப முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் பல படங்களில் அவருடைய நடிப்பில் எது நிஜம், எது நடிப்பு என்றே தெரியாத அளவிற்கு இருக்கும். ஏனென்றால் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அவ்வளவு தத்ரூபமாக நடிக்கக் கூடியவர்.
அப்போது காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு இணையாக பார்க்கப்படுபவர் சிவாஜி. எம்ஜிஆரின் பல படங்களில் பாடல் வரிகள் எழுதியவர் வாலி. எம்ஜிஆரின் அரசியல் நுழைவிற்கு முக்கிய காரணம் வாலியின் எழுத்துக்கள் இருந்தது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு தன்னுடைய ஆழமான கருத்துக்களை எம்ஜிஆரின் பாடல்களில் வாலி வைத்திருப்பார்.
இந்நிலையில் ஒரு நாள் கவிஞர் வாலி, எம்ஜிஆரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சிவாஜியும் இருந்துள்ளார். அப்போது எம்ஜிஆர் முன்பே சிவாஜியை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து பேசியுள்ளார். சிவாஜி ஏற்று நடித்த கதாபாத்திரங்களை போன்று வேறு எந்த ஒரு நடிகராலும் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும், சிவாஜி போல் ஒரு நடிகன் யாரும் இல்லை, அவரைப் போல் யாராலும் நடிக்க முடியாது என வாலி கூறியுள்ளார். ஆனால் எம்ஜிஆர் போன்ற மகா நடிகன் முன்பு எந்த ஒரு அறிவு இருக்கும் மனிதனும் மற்றவரை புகழ்ந்து பேசமாட்டான்.
ஆனால் வாலி எதார்த்தமாக சிவாஜியைப் புகழ்ந்து எம்ஜிஆர் முன்பு பேசியுள்ளார். ஆனால் எம்ஜிஆர் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் சிவாஜி போல் யாராலும் நடிக்க முடியாது அது உண்மைதான். ஆனால் சிவாஜிக்கு அடுத்து இடத்தை முத்துராமன் இடம்பெறுவார் என எம்ஜிஆர் கூறியுள்ளார்.
தன்னுடன் நடிக்கும் சக நடிகரை பற்றி கொஞ்சம் பெருமையாக பேசினாலே தற்போது உள்ள காலகட்டத்தில் மற்ற நடிகர்கள் பொறாமைபடுகிறார்கள். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் சிவாஜி பற்றி புகழ்ந்து பேசினாலும் எம்ஜிஆர் அதை ஏற்றுக் கொண்டுள்ளார், இதுவே அவருடைய நற்பண்பை காட்டுகிறது.