வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கோபியின் காதலை தும்சம் செய்ய கிளம்பிய அப்பா.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் கோபியின் கதாபாத்திரத்தை கண்டு அனைவரும் முகம் சுளிக்கின்றனர். 50 வயதை எட்டிய கோபி, மருமகள் வந்த பிறகும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யும் அளவிற்கு வக்கிரமான குணம் கொண்டவராக உள்ளார்.

பாக்யலட்சுமி தொடரைப் பார்க்கும் இல்லத்தரசிகள் கோபி போன்ற ஆட்களும் இருப்பார்களா என பயப்படுகிறார்கள். இத்தொடரால் பலர் கணவன்மார்களை மனைவி சந்தேகப்படுகிறார்கள். இதனால் பலரது வீட்டில் எப்போதும் பிரச்சனை தான். ஏனென்றால் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா இருவரையும் சமாளித்து ஒரே நேரத்தில் மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கோபியின் சுயரூபம் தெரிந்த எழில் தனது மனக்குமுறலை தாத்தாவிடம் கொட்டி தீர்க்கிறார். இதனால் கோபியின் தந்தை, இன்னும் கோபி ராதிகாவுடன் பழகுவதை நிறுத்தவில்லை என்ற ஆத்திரத்தில் இப்பவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என களத்தில் இறங்குகிறார்.

இதனால் கோபி, பாக்கியா உடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு நடக்க முடியாத சூழ்நிலையிலும் மருமகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும், ராதிகாவிற்கு கோபியின் சுயரூபத்தைக் காட்ட வேண்டும் என்றும் ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

தன்னுடைய தள்ளாத வயதிலும் கோபி போன்ற மகனைப் பெற்றெடுத்தாள் பக்கவாதம் வந்தும் தனது குடும்பத்தின் நிம்மதியை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் கோபியின் தந்தை செயல்பட்டு வருகிறார். ஆனால் இதை தடுக்க பல சூழ்ச்சிகள் வரலாம்.

எதர்ச்சையாக கோபி அங்கு வாக்கிங் வரும்பொழுது தன் தந்தையை பார்த்தால் கண்டிப்பாக ராதிகா வீட்டிற்கு செல்வதை தடுத்துவிடுவார். ஆனால் அதையும் மீறி கோபின் தந்தை ராதிகாவிற்கு வீட்டிற்கு சென்று உண்மையை உடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

Trending News