புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எல்லாரும் செத்ததுக்கு அப்புறம் எப்படி 2ம் பாகம்.? சுப்பிரமணியபுர ரகசியத்தை உடைத்த சசிகுமார்

2008ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஜெய், சமுத்திரகனி, ஸ்வாதி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் 2008ஆம் ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்தமானது.

80 கால கட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாக சுப்பிரமணியபுரம் சசிகுமார் இயக்கி இருப்பார். ஜெய் சுவாதியின் காதல், சசிகுமார் ஜெய்யின் நட்பு, சமுத்திரக்கனியின் பழிவாங்கும் எண்ணம், கஞ்சா கருப்புவின் துரோகம் என இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாக அமைத்திருப்பார் சசிகுமார்.

சசிகுமார் சுப்பிரமணியபுரம் படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவது பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார். அதாவது எனக்கு எந்த ஒரு படத்தையும் இரண்டாம் பாகம் எடுப்பதில் துளியும் விருப்பமில்லை எனவும் ஒரே ஒரு சுப்ரமணியபுரம் படம் மட்டுமே இருக்கட்டும் எனவும் கூறியுள்ளார்.

அதற்கு காரணம் வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு பல விமர்சனங்கள் வரும் அதனாலேயே வெற்றி படங்களை இயக்குவதில் தயக்கம் காட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் முதல் பாகத்திலேயே படத்தின் கதையை முழுவதுமாக கூறி விடுகிறோம் அதனால் இரண்டாம் பாகத்தில் சுவாரசியம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையெல்லாம் எழுதிவிட்டோம் அதாவது சுப்பிரமணியம் படத்தில் சசிகுமார் ஆற்றங்கரை ஓரத்தில் கொலை செய்வது போல் காட்டப்பட்டிருக்கும். சசிகுமார் கொன்றதை படத்தில் காட்டி இருக்க மாட்டார்கள். அதனால் ஆற்றங்கரையில் இருந்து சசிகுமார் வெளிவந்து தன்னைக் கொல்ல நினைத்த அனைவரையும் பழி வாங்குவது போல் கதை களத்தை அமைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் இப்படத்தில் ஜெய்யும் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு சசிகுமார் உன்னைத்தான் படத்தில் கழுத்தறுத்து போட்டு விட்டோமே அப்புறம் எப்படி நடிக்க முடியும் நானும் சித்தன் மட்டும் தான் நடிக்க முடியும் என கூறியுள்ளார். விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News