டிஆர்பி இல்லாததால் துரத்தி விட்ட விஜய்டிவி.. அதே நேரத்தில் வெளிவரும் புதிய சீரியல்

மக்கள் தங்களது இரவு நேரங்களை சீரியலுக்காகவே ஒதுக்குகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அதை நிஜம் என்று நம்பும் அளவிற்கு சீரியல்கள் உடன் ஒன்றியுள்ளனர். ரசிகர்கள் பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களையே விரும்பி பார்த்து வருகின்றனர்.

தற்போது விஜய் டிவிக்கு புதுவரவாக ப்ரைம் டைமில் சிப்பிக்குள் முத்து என்ற தொடர் வர இருக்கிறது. இதனால் விஜய் டிவியில் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, பாரதிகண்ணம்மா தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடங்களை பெறுகின்றனர்.

இதனால் இத்தொடர்கள் முடிவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் டிஆர்பியில் மிகவும் குறைவாக உள்ள செந்தூரப்பூவே தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. இத்தொடரில் நடிகர் ரஞ்சித் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது செந்தூரப்பூவே தொடர் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்பு பிக்பாஸ் முடிந்த பிறகு மீண்டும் இத்தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் செந்தூரப்பூவே தொடருக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் மிக விரைவில் முடிய உள்ளது.

தற்போது செந்தூரப்பூவே தொடரின் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ரோஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி தனது காதலன் மூலம் கர்ப்பமாக இருந்து குழந்தை பெற்றுக் கொண்டது பஞ்சாயத்தின் மூலம் அனைவருக்கும் தெரியவருகிறது. இதனால் துரைசிங்கம் குடும்பம் ரோஜாவை ஏற்றுக் கொள்கிறதா என்பதை இத்தொடரில் முடிவாக இருக்கும்.

இத்தொடருக்கு பிறகு இதே நேரத்தில் சிப்பிக்குள் முத்து தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் ப்ரோமோவே சற்று வித்யாசமாக இருந்தது. இத்தொடரில் தங்கையின் காதலுக்காக அக்கா ஒரு மன வளர்ச்சி குன்றிய நபரை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் இவர்களது வாழ்க்கையில் என்ன நிகழப்போகிறது என்பதை சிப்பிக்குள் முத்து.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →