வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கருப்பு ஹீரோவா சீச் என சொன்ன நடிகை.. ரஜினி, விஜயகாந்தை வெறுத்த சம்பவம்

வெள்ளையாக உள்ள நடிகர்கள் மட்டுமே ஹீரோவாக முடியும் என்ற பலரது விமர்சனங்களை தவிடுபொடியாக ஆக்கியவர்கள் ரஜினி மற்றும் விஜயகாந்த். ரஜினியின் ஸ்டைலும், விஜயகாந்தின் வசனமும் பல ரசிகர்களைக் கட்டிப்போட்டது. விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்று பலரும் அழைக்கின்றனர்.

ஆனால் ஒரு நடிகை கருப்பு நடிகர்கள் என ரஜினி மற்றும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்துள்ளார். இந்த நடிகை மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய முதல் படத்திலேயே திறமையான நடிப்பின் மூலம் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.

இந்த நடிகை அதிகமாக மோகன் மற்றும் பிரபுவுடன் இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபுவின் தந்தை சிவாஜியோடு நடித்துள்ளார். அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து 80, 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். இவர் கருப்பு நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என வந்த வாய்ப்பை உதறித்தள்ளி உள்ளார்.

பின்பு பலரின் வற்புறுத்தலின் பேரில் ரஜினியுடன் ஒரு படமும், விஜயகாந்துடன் ஒரு படமும் நடித்துள்ளார். பல நடிகைகள் ரஜினி மற்றும் விஜயகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என அழைந்த காலத்தில் அவர்களுடன் வந்த பட வாய்ப்பை உதறிய தள்ளிய ஒரே நடிகை இவர்தான்.

இந்த நடிகை திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். அவருடைய மகள்கள் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தற்போது இந்த நடிகை அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கினார்.

தற்போது முன்னணி நடிகராக உள்ள ஒருவருக்கு அம்மாவாக நடித்து, அதில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி அனைவரது பாராட்டையும் நடிகை பெற்றார். இந்த நடிகை தற்போது தமிழை விட மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News