செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025

பாலாவை தூக்கி பந்தாடும் திரையுலகம்.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டார்

இயக்குனர் பாலா வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து படங்களை எடுக்கக் கூடியவர். இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனென்றால் எப்படி இருந்தாலும் அவர்களை அடையாளம் தெரியாத அளவிற்கு பாலா மாற்றிவிடுவார்.

இவருடைய நிறைய படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் இவரைப் பார்த்தால் அஞ்சி நடுங்குவார்கள். ஏனென்றால் ஒரு சீன் சரியாக வருவதற்கு எத்தனை டேக் சென்றாலும் திட்டியோ, அடித்தோ அந்த காட்சியை சரியாக பாலா வாங்கிவிடுவார். பெரிய நடிகர்கள் கூட பாலா சொல்வதை தான் கேட்பார்கள்.

இதை மாற்றங்கள், அதை மாற்றுங்கள் என்றெல்லாம் சொன்னால் பாலாகிட்ட அதெல்லாம் வேலைக்கே ஆகாது. அவர்களுக்கு கொடுத்த வேலையை நடிகர், நடிகைகள் சரியாக செய்ய வேண்டும். இந்நிலையில் சமீபத்தில் பாலாவின் விவாகரத்து செய்தி இணையத்தில் பூதாகரமாக வெடித்தது.

இவர்களது விவாகரத்து பற்றி பல வதந்திகள் இணையத்தில் உலாவியது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பாலாவின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் 41வது படத்தை பாலா இயக்கயுள்ளார்.

இப்படத்திற்கு முன்னதாக சூர்யாவின் நந்தா மற்றும் பிதாமகன் படங்களை பாலா இயக்கியுள்ளார். இப்போது சூர்யாவை முந்தைய படங்கள் போலவே வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்ட பாலா திட்டமிட்டுள்ளார். ஆனால் இதுவரைக்கும் பாலா சொல்வதை கேட்டு வந்த பல பிரபலங்களும் தற்போது அவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசி வருகின்றனர்.

இப்படத்தில் சூர்யா தனக்கு பிடித்த மாதிரியான கெட்டப்பில் தான் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், தயாரிப்பாளரும் தற்போது உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோ, ஹீரோயின்களை அழகாக பார்ப்பதையே விரும்புகிறார்கள். அதனால் இப்படத்தில் சூர்யா அழகாக இருக்கவேண்டும் என பாலாவிடம் கட்டளையிட்டுள்ளாராம்.

இத்தனை நாள் பாலா சொல்வதைக் கேட்டு வந்த சூர்யா கூட தற்போது பாலாவிற்கு எதிராக பேசுவது நினைத்து கவலைப்பட்டு உள்ளார். மேலும் தன்னுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்த பல பிரபலங்களும் தற்போது தனக்கு எதிராக பேசுவது நினைத்து வேதனைப்பட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.சொந்த வாழ்க்கையிலேயே பல பிரச்சனை, திரை வாழ்க்கையையும் விட்டுவிடக் கூடாது என அனைத்திற்கும் பாலா ஆமாம் போட்டிருக்கிறாராம்.

Trending News