வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே நேரத்தில் 2 மாஸ் ஹீரோக்களை வைத்து இயக்கும் கொம்பன் பட முத்தையா.. எதிர்பாராத கூட்டணி

நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றியை சூடிய பிறகு விஷாலுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. விஷால், வீரமே வாகை சூடவா படத்திற்கு பிறகு வினோத்குமார் இயக்கி வரும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஷாலை இயக்கி வருகிறார்.

மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள மார்க்கண்டன் இப்படத்தில் விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தற்போது விஷாலின் 34ஆவது படத்திற்கான தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோவில் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் தயாரிக்கிறது.

விஷாலின் 34வது படத்தை முத்தையா இயக்குகிறார். விஷாலின் மருது படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தின் மூலம் மீண்டும் விஷாலுடன் இணைகிறார். முத்தையா படங்கள் முழுக்க முழுக்க கிராமத்தின் சாயலை கொண்டுதான் இருக்கும். கார்த்தியுடன் கொம்பன் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்து விருமன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விருமன் படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இப்படத்திற்குப் பிறகு விஷால் படத்தை முத்தையா இயக்கயுள்ளார். இதற்கு முன்னதாக கமலுடன் முத்தையா இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் முத்தையா இயக்கும் படத்தை கமல் தயாரிப்பதாகவும், இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தாமிரபரணி, சண்டக்கோழி, மருது போன்ற கிராமத்து அம்சங்கள் கொண்ட படங்கள் விஷாலுக்கு வெற்றி கொடுத்துள்ளது. ஆகையால் முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ள படமும் முற்றிலும் கிராமத்து சூழ்நிலையில் எடுக்கப்படும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எப்போதும் போல இப்படத்திலும் கிராமத்து கதைகளில் புகுந்து விளையாடுவார் விஷால். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Trending News