தனுஷின் கெட்டப்பை கேவலமாக பேசிய பிரபல நடிகையின் அம்மா.. இப்ப வரிசையில் நின்றாலும் சான்ஸ் இல்ல

தற்போதைய தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இப்போது புகழின் உச்சியில் இருக்கும் இவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார்.

ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் ஒல்லியான உடல்வாகுடன் இருந்த இவரை பலரும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இவருடைய நடிப்பு திறமையும், கடினமான உழைப்பும் தான் இன்று அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

இவர் ஆரம்ப காலத்தில் சந்தித்த கேலி, கிண்டல்கள் பற்றி நடிகை சோனியா அகர்வால் தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் காதல் கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் சோனியா அகர்வால் ஹீரோயினாக அறிமுகமானார்.

அப்படத்தில் இவர் நடிக்க வரும்போது சோனியா அகர்வாலின் அம்மா தனுசை பார்த்து இந்தப் பையன் தான் ஹீரோவா என்று கேட்டுள்ளார். பின்னர் இது உன்னுடைய முதல்படம் அதனால் சரியாக தேர்வு செய்ய வேண்டாமா என்று அவரை திட்டி உள்ளார்.

அதற்கு சோனியா அகர்வால் அம்மா படத்தின் கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. என்னுடைய கேரக்டருக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. தனுஷின் கெட்டப் படத்தில் இப்படித்தான் இருக்கும் என்று அவரது அம்மாவிடம் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் இருவருக்குமே இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.

இதே போல தனுஷின் தோற்றத்தைப் பார்த்து அவரை ஆரம்பகாலத்தில் நிராகரித்த நடிகைகள் ஏராளம் என்று தான் கூற வேண்டும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷ் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட முடியாதா என்று பல நடிகைகளும் ஏங்கி வருகின்றனர்.