தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் தான் தளபதி விஜய். ஆரம்பத்தில் இவரை சினிமாவில் அறிமுகமாகியது இவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். விஜய் 1992 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதன்பிறகு விஜய்க்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தற்போது இந்த உயரத்தை அடைந்துயுள்ளார். சமீபகாலமாக விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்க்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் விஜய் அவரது தந்தையே சந்திப்பது இல்லை என்ற தகவலும் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் அண்மையில் ஒரு ஊடகத்திற்கு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பேட்டி அளித்துள்ளார். இதில் விஜயைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் நம்மை தாழ்த்தி பேசுவதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என கூறியிருந்தார். ஏனென்றால் விஜய்யின் முதல் படத்தில் நடித்தபோது இந்த மூஞ்சி எல்லாம் பாக்கணுமா, தகர டப்பா மூஞ்சி என ஒரு பத்திரிக்கையாளர் கமெண்ட் செய்துள்ளார். அதையே குறிக்கோளாக எடுத்துக்கொண்ட எஸ்ஏசி இந்த மூஞ்ச நீ பார்த்துதான் ஆகவேண்டும் என தொடர்ந்து விஜய்யின் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த ஒரு வார்த்தை தான் தனக்கு உத்வேகமாக இருந்தது என குறிப்பிட்டிருந்தார். மேலும், விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் தனது சொந்தமான ஒவ்வொரு வீட்டையும் விற்றதாக அதில் SA சந்திரசேகர் கூறியுள்ளார்.
அதற்கான பலன் ரசிகன் படத்தில் விஜய்க்கு கிடைத்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகன் படம் வெள்ளி விழா கண்டது. இதனால் எதிர்மறையான விமர்சனங்கள் நம்மை உயரத்திற்கு தான் அழைத்துச் செல்லும் என எஸ்ஏசி கூறியுள்ளார்.