காரை துடைத்து, சாப்பாடு பரிமாறிய ராகவா லாரன்ஸ்.. பல அவமானங்களுக்கு பின் ரஜினி கொடுத்த வாழ்க்கை

நடன இயக்குனராக திரையுலகில் அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் ராகவா லாரன்ஸ். அதேபோன்று அவரது காஞ்சனா சீரிஸ் படங்களுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள். பேய் படங்களில் காமெடியை கலந்து முதல்முறையாக ராகவா லாரன்ஸ் வெற்றி படமாக எடுத்து இருப்பார். அப்படிப்பட்ட ராகவாலாரன்ஸின் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தார் என்பதைப் பற்றிய தொகுப்பை தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்

ராகவா லாரன்ஸ் சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்பதற்காக பல இயக்குனர்களிடம் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார். ஆனால் அவர்கள் அனைவரும் நீ அழகாக இல்லை, நீ கலராக இல்லை என அவரின் தோற்றத்தை வைத்து எடை போட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ராகவா லாரன்ஸ் மனம் தளராமல் எப்படியாவது சினிமாவில் நுழைந்திட வேண்டும் என்பதற்காக பைட் மாஸ்டர் திலிப் சுப்புராயனிடம் அவரிடம் அசிஸ்டன்ட் ஆக வேலை செய்தார்.

அவரது காரை துடைப்பது, பீடா வாங்கிக் கொடுப்பது, அவருக்கு ஷூட்டிங்கில் சாப்பாடு பரிமாறுவது உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு வேலைகளை தன் சிறு வயதில் ராகவாலாரன்ஸ் செய்துள்ளார். இதுதான் தான் முதலில் பார்த்த வேலை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில்தான் ராகவாலாரன்ஸின் வாழ்க்கையை திருப்பி போட்ட ஒரு கணம் அமைந்தது.

ஆம் நடிகர் ரஜினிகாந்த் ஒரு நாள் சூப்பர் சுப்புராயனுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாப்பாடு பரிமாறிய சிறுவன் ராகவா லாரன்சை பார்த்து சூப்பர் சுப்புராயன் ரஜினியிடம் நன்றாக ஆடுவார் என்று பெருமையாகப் பேசினார். அப்போது ரஜினியும் சற்றும் யோசிக்காமல் எங்கு ஆடி காமி என்று சொல்ல ராகவா லாரன்ஸும் தயங்காமல் ஆடி காட்டினார். அப்போது ரஜினி நாளைக்கு வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டு தன்னுடைய படப்பிடிப்புக்கு சென்று விட்டார். மறுநாள் ரஜினியின் வீட்டிற்கு சென்ற ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது.

அதில் ராகவா லாரன்ஸிடம் ரஜினி ஒரு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில் வருங்காலத்தில் ஒரு நல்ல நடன கலைஞர் உருவாக்கிக் கொண்டு இருக்கிறான். இவனை நல்லபடியாக உருவாக்குங்கள் என்று நடன கலைஞர்கள் சங்கத்தில் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை ரஜினிகாந்த் ராகவா லாரன்சின் கைகளில் கொடுத்தார். இதை பார்த்த ராகவா லாரன்ஸ் ஆனந்தத்தில் துள்ளி குதிக்க பின்பு நடன கலைஞர்கள் சங்கத்தில் போய் சேர்ந்தார். அதன்பிறகு ரஜினிகாந்தின் உதவியுடன் நடன இயக்குனர் பிரபுதேவா உடன் அசிஸ்டெண்டாக சேர்ந்தார்.

பிரபு தேவாவின் நடனத்தில் பல திரைப்படங்களில் ராகவா லாரன்ஸ் பின்னால் ஆடும் நடன கலைஞராக வலம் வந்தார். அப்போது தெலுங்கு படத்தில் ராகவா லாரன்சின் நடனத்தை பார்த்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய ஹிட்லர் படத்திற்கு ராகவா லாரன்சை நடன கலைஞராக அறிமுகம் செய்தார். அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் தமிழில் அமர்க்களம், வருஷமெல்லாம் வசந்தம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற பல திரைப் படங்களில் நடன இயக்குனராக அறிமுகமானார்.

அதிலும் முக்கியமாக அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகணபதி பாடலில் அஜித் ராகவாலாரன்ஸின் இயக்கத்தில் ஆடிய நடனம் பலரும் இன்றளவும் மறக்கமுடியாத நடனமாக அந்த பாடல் அமைந்தது. இப்படி ராகவா லாரன்ஸ் பல நடன இயக்குனராக இருந்தபோது ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில் பேய் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டனர்.

அப்போதுதான் காஞ்சனா சீரிஸ் உருவானது, சிறுவயதிலேயே மூளையில் கட்டி ஏற்பட ராகவா லாரன்ஸ் பல கஷ்டங்களை சந்தித்தார். அதனால் இன்றும் ராகவா லாரன்ஸ் தன்னை போல் வேறு எந்த குழந்தையும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதயம் மூளை போன்ற அறுவை சிகிச்சைகளை தன் சொந்த செலவில் செய்து கொடுக்கிறார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளையும் அவர் தொடங்கியுள்ளார். வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் உடலின் நிறமும் தோற்றமும் தேவையில்லை திறமை மட்டுமே போதும் என்பதை ஆழமாக உணர்த்தியவர் தான் ராகவா லாரன்ஸ்.