யதார்த்தமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த தொடர்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி. எழிலுக்கு, கோபி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்ற விஷயம் தெரிந்ததால் தற்போது இத்தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ராதிகாவிடம் உண்மையை சொல்லவேண்டும் என்ற கோபி தந்தையின் முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால் மேலும் கோபி, ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். எழில் தாத்தாவிடம் ஏன் இந்த போட்டோவை எடுத்து சென்றீர்கள் எனக் கேட்க தாத்தாவால் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.
பின்பு எழில் தாத்தாவை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். எழில் தன் தந்தையின் நடவடிக்கையால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். இந்நிலையில் அமிர்தாவிடம் தனது மனக்குமுறலை கொட்டித் திட்டுகிறார் எழில். தன் அப்பா வேறு பெண்ணுடன் பழகி வருகிறார் .
அதை தடுக்க பல முயற்சிகள் செய்தும் அந்தப் பெண்ணுடன் தற்போதுவரை எனது அப்பா பழகி வருகிறார் என்பதை அமிர்தாவிடம் கூறுகிறார். மேலும், இந்த விஷயம் மட்டும் என் அம்மாவுக்கு தெரிந்தால் என்ன அவங்க என்றே தெரியவில்லை என கதறி அழுகிறார். இதனால் செய்வதறியாமல் அமிர்தா எழிலை தன் தோல் மீது சாய்த்து ஆறுதல் கூறுகிறாள்.
அப்போது எதர்ச்சையாக வந்த அமிர்தாவின் மாமியார் இதை பார்த்துவிடுகிறார். ஆனால் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமிர்தா உனக்கு எழிலை பிடித்து இருந்தால் எனக்கு சந்தோசம்தான் என கூறுகிறார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அமிர்தாவின் மனதில் எழில் இடம்பிடித்து வருகிறார்.
இதனால் அடுத்தது இவர்களது காதல் ட்ராக்கில் தான் பாக்கியலட்சுமி தொடர் செல்ல இருக்கிறது. மேலும் எழில், அமிர்தா இருவரிடையே பல ரொமான்ஸ் காட்சிகள் வர உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக யார் இருக்க போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.