இது நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு பா என்று சொல்லும் அளவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய நடிப்பின் மூலமாக மக்களை கவர்ந்தவர். தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் 2010ஆம் ஆண்டு வெளியான அவர்களும், இவர்களும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.
2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 80 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. பத்மா என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கதாபாத்திரம் ஆக மாறியது. அதற்கு காரணம் அவர் பேசிய வசனங்களும் அவரின் எதார்த்தமான நடிப்பும் தான். இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில் இந்த வடசென்னை படத்தின் ஆடிஷன் டைமில் நடிகை சமந்தா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் ஆடிஷன் முடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது நானும் வெற்றிமாறன் சாரின் ஆபிசுக்கு போனேன். திடீரென்று உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் என்னிடம் பேசி காட்டு என்று வெற்றிமாறன் சொன்னார். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன் வெற்றிமாறன் சார், நான் எப்படி பேசுவது, அதுவும் உங்கள் முன்னாள் என்று தயங்கி கேட்டேன். அதற்கு பக்கத்தில் இருந்த செல்வம் நீ பேசு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பிறகு வெற்றிமாறனும் தைரியம் கொடுத்தார், திடீரென திரும்பி எனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பேசினேன். அப்போது வெற்றிமாறன் வெளியே வேகமாக சென்று விட்டார், நான் பயந்து போய் ஓடி சார் என்ன ஆச்சு என்று கேட்டேன். அப்புறம் பத்மா வடசென்னை சூட்டிங்கில் தயாராகிவிடு என்று கூறினார்.
அந்த தருணத்தில் அதிர்ச்சி கலந்த சந்தோஷமாக எனக்கு இருந்தது. மேலும் நடிகர் தனுஷும் நான் இந்த படத்தில் அப்படி எல்லாம் பேசும் போது என்னை ஊக்கப்படுத்தினார். மேலும் டப்பிங் டைமில் நீ என்னை விட நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார். திரையரங்குகளில் வடசென்னை படத்தில் கிடைத்த வரவேற்பு என்னால் இன்றளவும் மறக்கமுடியாத வரவேற்பு அதற்கு ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.