ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஏ ஆர் ரகுமான் பெற்ற 5 தேசிய விருதுகள்.. ஆஸ்கருக்கு இணையான இசை இதுதான்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசையை விரும்பாதவர்கள் எவருமில்லை. இந்திய சினிமாவில் முதன்முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஒரே நேரத்தில் வென்ற முதல் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான். இவரது இசையில் வெளியாகும் திரைப்படங்களை பார்க்கவே பல ரசிகர்கள் உள்ளனர். அந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி படமாக அமையும் என்பது பல ரசிகர்களின் எண்ணங்களாக இன்றளவு இருக்கும்.

ரஹ்மானின் இசையில் வெளிவந்த படங்களில் அவர் பல விருதுகளை வாங்கியுள்ளார். பிலிம்ஃபேர் விருதுகள் தமிழ்நாடு விருதுகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் பல விருதுகளை வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தேசிய விருதினை ஏ.ஆர் ரஹ்மான் 5 படங்களுக்கு வாங்கியுள்ளார். அது என்னென்ன திரைப்படம் என்பதை நாம் பார்க்கலாம்

ரோஜா: 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கினார். அரவிந்த்சாமி மதுபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் .கடத்தப்பட்ட தன் கணவனான அரவிந்த்சாமியை மீட்பதற்காக மதுபாலா துணிச்சலாக செயல்படும் காட்சிகளை இத்திரைப்படத்தில் மணிரத்தினம் காட்டியிருப்பார். இத்திரைப்படத்தில் தான் ஏ ஆர் ரகுமான் முதன்முதலில் இசை அமைத்தார். சின்ன சின்ன ஆசை பாடல், புது வெள்ளை மழை,காதல் ரோஜாவே என பல பாடல்களை ஆர் ரகுமான் ரசிக்கும்படி இசை அமைத்திருப்பார். முதன்முதலாக தனித்துவமான இசையை ரோஜா திரைப்படத்தில் மக்கள் கேட்டு ரசித்தனர். இந்த நிலையில் தனது முதல் படமான ரோஜா திரைப்படத்திலேயே ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதினை 1993-ஆம் ஆண்டு பெற்றார்.

கன்னத்தில் முத்தமிட்டால்: 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். நடிகர் மாதவன், சிம்ரன் பார்த்திபனின் மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். தன் உண்மையான தாயை கண்டு பிடிக்க போராடும் மகளாக அமுதா கதாபாத்திரத்தில் கீர்த்தனா நடித்திருப்பார். இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதேபோல, இந்த படத்தில் வெளியான ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் இன்றளவும் பிரபலமான பாடல். இந்த பாடலை பாடகி சின்மயி மற்றும் பாடகர் யேசுதாஸ் தனித்தனியாக பாடியிருப்பார். இந்த படத்தில் இசை பிரம்மாண்டமாக அமைந்தது. அதனால் ஏ ஆர் ரஹ்மானுக்கு 2003ஆம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.

லகான்: பாலிவுட்டில் 2002 ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் திரைப்படம் அந்த ஆண்டு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் சில சம்பவங்களை வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் பாடகர் உதித் நாராயணன் பாடிய பாடல் பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருதினை பெற்றார். மேலும் அந்த படத்தின் இசைக்காக ஏ ஆர் ரஹ்மான் தேசிய விருது பெற்றார்.

மின்சார கனவு: 1996 ஆம் ஆண்டு வெளியான மின்சாரக்கனவு திரைப்படத்தை இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கினார். பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் உள்ளிட்ட நடித்த இந்த திரைப்படம் பல விருதுகளை வாங்கியது. தன் காதலியான கஜோலிடம் தன் காதலை சொல்ல தைரியமில்லாத அரவிந்த்சாமி பிரபுதேவாவின் உதவியை கேட்க கடைசியில் பிரபுதேவாவும் காஜலும் சேரும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த திரைப்படத்தில் வெளியான ஊ ல ல ல லா….. பாடல், தங்கத் தாமரை மகளே உள்ளிட்ட பாடல்களை பாடிய சித்ரா மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம் இருவருக்கும் சிறந்த பாடகர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் 1997 ஆம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது .

 காற்று வெளியிடை: 2017 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிகை அதிதி ராவ் ஹைடாரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.காதலிப்பவர்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் மற்றும் மனப் போராட்டங்களை இந்த திரைப்படத்தின் வாயிலாக இயக்குனர் மணிரத்னம் கூறியிருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற வான் வருவான் பாடலை பாடிய சாஷா திருப்பதிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதேபோல இந்த படத்தின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரஹ்மான் பெற்றார்.

Trending News