விசு குடும்ப படங்கள் படைப்பதில் வல்லவர். அவர் இயக்கிய மணல்கயிறு, வேடிக்கை என் வாடிக்கை, குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம் போன்ற குடும்ப கதைகள் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவவை.
அவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் படம் சிறந்த குடும்பப் படமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் நகைச்சுவை கதாபாத்திரத்திற்காக அந்த படத்தில் ,விசுவும் அவரது தம்பியும் இருப்பதாகக் கூறி மனோரமா கதாபாத்திரத்தை நீக்கி விட்டாராம் விசு.
இந்த கதையை ஏவிஎம் சரவணனிடம் விசு சொல்லியபோது, உங்கள் நகைச்சுவை காட்சிகள் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இந்தப் படம் எல்லா ஊர்களிலும் சென்றடைய வேண்டும் என்றால், அதற்கு மனோரமா போன்ற ஒரு சிறந்த கதாபாத்திரம் வேண்டும். இந்த கதாபாத்திரத்திற்காக கதையை மாற்றி அமையுங்கள் என்று விசுவிடம் கூறிவிட்டாராம்.
இதனை ஒப்புக் கொள்ளாத விசு, வேண்டாம் நகைச்சுவை கதாபாத்திரங்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றாராம். அதற்கு நீங்கள் மனோரமாவை இந்தக் கதையில் எப்படியாவது புகுத்தி, படத்தை ரெடி பண்ணுங்கள் என்று விடாப்பிடியாய் சரவணனும் , விசுவிடம் கூறிவிட்டாராம்.
அதன்பின் தான் விசு யோசித்து “கண்ணம்மா” என்ற வேலைக்கார கதாபாத்திரத்தை அந்தப்படத்தில் கொண்டுவந்து அசத்தினார்.அந்த “கண்ணம்மா” கதாபாத்திரமே அந்த படத்திற்கு தூணாக அமைந்தது.
படம் ஆரம்பித்த பிறகு ஏவிஎம் சரவணனிடம், இப்பொழுது இந்த கண்ணம்மா கதாபாத்திரம் இல்லாமல் என்னால் இந்த படத்தை எடுக்கவே முடியாது என்று கூறி, அந்த கதாபாத்திரம் வைக்க சொன்ன சரவணனுக்கு ஒரு நன்றியை சொன்னாராம் விசு.