புதன்கிழமை, ஜனவரி 8, 2025

அறம் மாதிரி எனக்கு ஒரு படம் வேணும்.. ரீ-என்ட்ரிக்காக அடம்பிடிக்கும் 37 வயது நடிகை

சினிமாவில் கலரான நடிகைகள்தான் ரசிகர்கள் கவர முடியும் என்ற எண்ணத்தை மாற்றிய பிரபல நடிகை சமீபகாலமாக தமிழ் படங்களில் தலை காட்டாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கிராமத்து திமிர் பிடித்த கதாபாத்திரங்களில் இப்படித்தான் இருக்கும் வேண்டும் என்ற அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

மேலும், அந்தப்படத்தில் ஹீரோவை விட, ஹீரோயின் தான் நடிப்பில் மிரட்டி அனைவரது பாராட்டையும் பெற்றார். அந்த நடிகை வேறு யாருமில்லை பிரியாமணி தான். தனது திறமையான நடிப்பிற்காக பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த பிரியாமணி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் தமிழில் சரியான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மேலும் தமிழில் அவர் நடித்த படங்களும் சரியாக போகவில்லை.

இதனால் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்காதது அவரது ரசிகர் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படம் தனக்கு பிடித்த படம் என பிரியாமணி கூறியுள்ளார்.

இப்படத்தில் மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் கலெக்டராக நயன்தாரா நடித்து இருந்தார். இதில் அவருடைய துணிச்சலான நடிப்புக்காக பலரது பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் அது மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன்.

அது மாதிரியான கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என பிரியாமணி உறுதியளித்துள்ளார். இதைக்கேட்ட அவரது ரசிகர்கள் பிரியாமணியை தமிழ் படங்களில் பார்ப்பதற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News