நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய பல படங்களில் அரசியல் கலந்த கதையை மையமாக வைத்து மக்களிடம் ஆழமாக கொண்டு சேர்ப்பவர். கேப்டன் விஜயகாந்தை வைத்து சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தவர் எஸ் ஏ சந்திரசேகர்.
பிளாட்பாரத்தில் உறங்கி பல இன்னல்களுக்கு பிறகு திரைப்படங்களை இயக்கி தற்போது நடிகர் விஜய் எனும் பொக்கிஷத்தை இந்திய சினிமாவிற்கு முதன்முதலில் கை காட்டியவர் எஸ் ஏ சந்திரசேகர். 1992ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஜய்யை எஸ்ஏ சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் நாளைய தீர்ப்பு, ஒன்ஸ்மோர், சுக்ரன்,ரசிகன், நெஞ்சினிலே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.
கேப்மாரி, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ் ஏ சந்திரசேகர் அந்த திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதே சமயத்தில் சமீபகாலத்தில் எஸ்ஏ சந்திரசேகர் அரசியலில் ஈடுபடப் போவதாக கட்சி தொடங்கிய நிலையில் தற்போது அதையும் முடக்கி விட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் வளர்ச்சியை தந்தையாகவும் இயக்குனராகவும் பார்த்து ரசித்த சந்திரசேகர் மற்ற பல நடிகர்களின் திரைப்படங்களையும் பார்த்து ரசிப்பார்.
ஆனால் அஜித் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர் என் மகன் திரைப்படங்களைப் போலவே மற்ற நடிகர்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பேன். ஆனால் அஜித் திரைப்படத்தை மட்டும் முதல் நாள் முதல் ஷோவை திரையரங்குகளில் நான் பார்க்க மாட்டேன்.
ஏனென்றால் அஜித்தையும் விஜய்யையும் ஏற்கனவே ரசிகர்கள் தனித்தனியாக பார்த்து வரும் நிலையில், இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் மேலும் பலரும் தவறாகப் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் நான் தவிர்த்து விடுகிறேன். ஆனால் அஜித்தை சந்தித்து பேசி உள்ளேன் அவர் மிகவும் நாணயமாக பேசுவார். அதிகமாக சினிமாவைப் பற்றியே தன்னிடம் பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் கடந்த வருடம் வெளியான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் எஸ்ஏ சந்திரசேகர் நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் பேசினார்.
தனக்கு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய புகைப்படத்தை பார்க்கும் போது அளிக்கிறது என்று தெரிவித்தார். நடிகர் விஜய்யின் ஆரம்ப கால கட்டத்தில் தன்னுடைய தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கிய படங்களில் நடித்தது போலவே தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் நடிப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது.